கிழக்கு மாகாணம்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு- சம்பந்தன் எதிர்ப்பு

நிறுத்துமாறு கோரி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம்-
பதிப்பு: 2019 மார்ச் 17 22:52
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 23:10
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ பேசும் மக்களின் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசச் செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. மூதூர் பிரதேசச் செயலகத்தை பிரித்து, மூதூர், தோப்பூர் என்ற இரு பிரதேசச் செயலகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்களின் பின்னணியிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசரத்தைக் குறைத்துக் காண்பிக்கும் நோக்கிலும் இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக தமிழ்த்தரப்புகள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தன. இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
 
அத்துடன் இரண்டாகப் பிரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுமுள்ளார்.

மூதூர் பிரதேசச் செயலகத்தை இரண்டாகப் பிரிக்கும் ஏற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் தன்னுடன் பேச்சு நடத்தவில்லை என்றும் சில அரசியல் குழுக்களின் அழுத்தங்களினால் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாகவும் சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூதூர் பிரதேசச் செயலகத்தை பிரித்து, மூதூர், தோப்பூர் என இரண்டு பிரதேசச் செயலகங்களை உருவாக்கும் நடவடிக்கை, பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் சம்பந்தன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதன் மூலம் இரண்டு முஸ்லிம் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும் எனவும் இதனால் இரண்டு பிரதேச செயலகங்களிலும் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடயும் என்றும் சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

70,188 மக்கள் வசிக்கும், மூதூர், பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில், 26, 608 பேர் தமிழர்கள். அதாவது நாற்பது சதவீதமான தமிழ் மக்கள் அங் வாழ்க்கின்றனர்.

இந்த நிலையில் இந்த நிலையில் இரண்டாகப் பிரித்து நிர்வாக ரீதியாக மேலும் தமிழ் மக்களை தனிமைப்படுத்த அரசாங்கம் முற்படுவாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.