ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா

மனித உரிமைச் சபையின் தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதை நிராகரித்தார் மைத்திரி

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் திருட்டுத்தனமாகக் கையொப்பமிட்டதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 மார்ச் 27 22:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 27 23:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி என்ற முறையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக தனக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லையென மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை தெரிவித்தார். தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் யோசணைக்கு ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் கடந்த 25 ஆம் திதி திருட்டுத்தனமான கையெப்பமிட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பின் புநகர் பகுதியான களுத்துறை, மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளையும் ஜனாதிபதி காரசாரமாக விமர்சித்தார்
 
ரணில் தலைமையிலான அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதை ஜனாதிபதி என்ற அடிப்படையில் நிராகரித்துள்ளதாகவும், ஆனாலும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இலங்கைக்கு ஏற்புடையதான விடயத்தை மாத்திரமே பரிசீலிக்க முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இலங்கையின் இறைமைக்கு ஆபத்தான விடயங்களை ஏற்க முடியாது. அதை நடைமுறைப்படுத்தவும் முடியாது. மிகவும் உறுதியாக இதனைக் கூறுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்குமாறு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அந்தக் கோரிக்கையை ஆரம்பத்திலேயே ஜனாதிபதி என்ற முறையில் நிராகரித்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையிடம் நேரடியாகக் கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜெனீவா செல்விருந்த தூதுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன எழுதியிருந்த அறிக்கையில் இறுதி நேரத்தில் ஜனாதிபதி என்ற முறையில் தான் மாற்றம் செய்யதாகவும் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை கூட வேறு சிலரினால் எழுதப்பட்டிருந்தது எனவும் மைத்திரிபால சிறிசன குற்றம் சுமத்தியிருந்தார்.

இணை அனுசரணை வழங்கியமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். ஜே.வி.பியும் குற்றம் சுமத்தியிருந்தது. ஆனாலும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிக் கட்டமைப்பை நிராகரித்தமைகை்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு பாராட்டும் தெரிவித்திருந்தனர்.