தமிழர் அரசியல் தேர்தலுக்கு அப்பாலானது இல்லையா?

இலங்கைத் தீவில் பன்னாட்டுப் பொருளாதார, பூகோள அரசியல் வலையில் தமிழக அரசியல்வாதிகள் ஏன்?

தமிழுணர்வு மட்டும் போதுமா? தமிழ் நிலம் சார்ந்த பூகோள அரசியல் புரியவேண்டாமா?
பதிப்பு: 2019 மார்ச் 28 16:51
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: மார்ச் 28 22:07
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#India
#ParliamentElection
#Srilanka
#Political
#China
வரவிருக்கின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வீரியம் பெற்றிருக்கும் நிலையில், தி.மு.கவின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் அவர்களின் குடும்ப நிறுவனம் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் பெரு முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னதாக, இலங்கை ஒற்றையாட்சி அரசின் முதலீட்டுக் குழுமம் (Board of investment) தெரிவித்த கருத்தினை முன்வைத்து தமிழகத்தின் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் மீரா சிறீனிவாசன் எழுதிய கட்டுரையினால் இக்கருத்து தமிழக வட்டத்தில் பேசும் பொருளாய் மாறியிருக்கின்றது. தேர்தல் காலத்தில் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டதா எனவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
 
தி.மு.கவினது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ஈழம், ஈழத்தமிழர்கள் சார்ந்த தீர்க்கமான அறிவிப்புகளை கொள்கையாகத் தெரிவித்திருந்தபோதும், புவிசார் அரசியலில் அதற்கு நேர்மாறாக தி.மு.கவினது வேட்பாளர்கள், தி.மு.க நிர்வாகிகளே ஈடுபடுவதும் பெருத்த முரண்பாடானதாகும் என்று சென்னையில் இருக்கும் ஈழத் தமிழ் விவகார அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் வரும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட திட்டங்களில் பன்னாட்டு முதலீடுகள் வழியே தமிழகம் சார்ந்த நிறுவனம் ஈடுபடுவது பொருளாதார நோக்கில் மட்டும் அமையப்போவதில்லை என்பதனையும் தமிழகத்தில் பேசிய, பேச வேண்டிய அரசியலுக்கு எதிரான பாதையையே வருங்காலத்தில் உருவாகும் ஆபத்தையும் உணர தமிழகம் ஒட்டுமொத்தமாக தவறிவிடுகின்றது என்றும் அவர்கள் கூர்மை இணையச் செய்தித் தளத்திடம் கவலை வெளியிட்டனர்.

எதுவாயினும், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசுக்கு எதிராக தொடர்ந்தும் தீர்க்கமான குரலை எழுப்பி வரும் தி.மு.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தீவினது புவிசார் அரசியல் பொருளாதார முடிச்சுகளில் பெரிய கவனம் இதுவரை செலுத்தவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜகத் ரட்சகன் அவர்களது குடும்ப நிறுவனமான சிங்கப்பூரைச் சேர்ந்த Silver Park International PTE Ltd வழியே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான 70% முதலீட்டையும் ஓமான் நாட்டின் எண்ணெய் நிறுவனம் வழியே 30% முதலீட்டையும் மேற்கூறிய திட்டம் பெறப்போவதாக செய்திகள் தெரிவித்தாலும், முழுமையாக சீனாவிற்கான ஏற்றுமதிக்கானதுதான் இத்திட்டம் என்பதையும் இலங்கை அரசின் முதலீட்டுக் குழுமம் தெரிவித்ததாகவே செய்திகள் வெளிவந்தன.

ஆனால், இந்து நாளிதழில் ’இலங்கையின் மூத்த அதிகாரி’ வழியே செய்தி கிடைத்தன என சொல்லியிருந்தாலும் எவ்வித மேற்கோள்களும் காட்டப்படவில்லை என்பதையும் கூர்மை கருத்திற்கொள்ள விரும்புகின்றது.

இதற்கும் அப்பால், ராஜபக்ச சீனாவினைச் சார்ந்தவர் என்றும் ரணில் மேற்குலகம் சார்ந்தவர் என்பதுமான மாயையை தமிழர் தரப்புகள் கைவிட வேண்டும் என்பதையும் கூர்மை தொடர்ந்தும் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

துறைமுக ஒப்பந்தம் 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கென ஒப்பந்தம் கையெழுத்தாகியதும், அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கான எண்ணெய் அகழ்வாராய்ச்சி புரிய சீனாவின் கப்பலை பணிக்கு அமர்த்தியதும் (தமிழர்களை குழப்பவோ?), தற்சமயம் நடந்தும் வரும் சீனாவின் பெரும் முதலீடு சார்ந்த அனைத்துத் திட்டங்களும் ரணிலின் தலைமையில் ராஜபக்சவின் தலையீடு இல்லாமல் நடந்து வருவதும் இங்கு கவனிக்கற் பாலது.