நடப்பு நிதியாண்டுக்கான

இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா? மகிந்த அணிக்கு சவால் விடும் ஐக்கிய தேசியக் கட்சி

எதிர்த்து வாக்களிப்பதில்லை என்கிறது மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி
பதிப்பு: 2019 மார்ச் 29 23:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 29 23:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முடியுமானால் தோற்கடிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சிக்கு சவால் விடுத்துள்ளது. இலங்கையின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது வருகின்றது. இந்த விவதத்தின்போது அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இ;டம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.
 
மகிந்த ராஜபக்ச அணி திட்டமிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உறு்ப்பினர்கள் சபையில் இல்லாத நேரம் பார்த்து வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குறித்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டன.

ஆனால், மீண்டும் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து குறித்த மூன்று அமைச்சுக்களுக்குமான நிதியை ஒதுக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

எனினும் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட வேண்டுமெனவும் அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்ற முடியுமென்றும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறுபோது தோற்கடிக்க முடியுமா என மகிந்த ராஜபக்ச அணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதில்லையென கூறியுள்ளனர்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் என்ற முறையில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணியுடன் சேர்ந்து செயற்படுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கூறியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.