வடமாகாணம்

மன்னாரில் மத ஒற்றுமையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்- பிரதேசத்தை துண்டாட வேண்டமென வலியறுத்தல்

பெருமளவு மக்கள் பங்கேற்பு
பதிப்பு: 2019 ஏப். 10 14:10
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 10 14:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இன மத ஒற்றுமைய வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற போராட்டத்தில் மன்னார் நகர், மடு, மாந்தை, முசலி, நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களைச் சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்குகொண்டனர். மன்னார் மாவட்ட பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர். மதங்களைக் கடந்த மனிதத்தை நேசிப்போம் என்ற தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
சில தீய சக்திகளின் பின்னணியில் மதக் கலவரங்கள் தூண்டப்படுவதாகவும் அதற்கு சகல மதத்தவர்களும் இடமளிக்கக் கூடதெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

மன்னார் மண்ணில் மதங்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்போம். காலமாக பேணி வரும் உறவுகளை மத பிரச்சினையால் பிளவுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதாதைகள், சுலோக அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

மதம் என்ற அடையாளத்திற்காக தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை இழந்துவிடக் கூடாது என்றும் வரலாற்று ரீதியாக மன்னாரில் நிலவிய ஒற்றுமையை மேலும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் சைவம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மத ஒற்றுமைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் போராட்டம் இடம்பெற்றது. எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.