வடமாகாணம்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் எட்டுப்பேர் இலங்கைப் பொலிஸாரால் கைது

உறவினர்கள் மறுப்பு- வவுனியாவில் இளைஞர்கள் அட்டகாசம்
பதிப்பு: 2019 ஏப். 15 23:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 15 23:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவா எனப்படும் குழவின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுத்துறையும் இலங்கைப் பொலிஸாரும் செயற்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் இலங்கைப் பொலிசார் நடத்திய சோதனை, தேடுதல் நடவடிக்கைகளில் ஆவா குழுவைச் சேர்ந்த எட்டுப்போர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய், உடுவில் பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மானிப்பாயில் உள்ள இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடமும் விசாரணை நடத்தப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களோடு இவர்களுக்குத் தொடர்புள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

சந்தேக நபர்கள் எட்டுப்பேரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை. கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் அப்பாவிகள் எனவும் ஆவாக்குழுவுடன் தொடர்பில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வவுனியா, கோவில்குளம் பிரதேசத்தில் இளைஞர் குழுவினால் கார், முச்சக்கரவண்டி ஆகிய இரண்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் இருந்த இளைஞர்களே அடித்து நொருக்கியதாகவும் இதனால் வாகனச் சாரதிகளுக்கும் இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

வவுனியாவில் உள்ள இலங்கைக் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான வனமுறைகளுக்கு இலங்கைப் பொலிஸாரே காணரம் என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.