மூன்று லட்சம் ரோகிங்யாக்கள் பல தசாப்தங்களாக அகதிகளாக வாழும்நிலை

சவுதி அரேபியாவில் சிறையிலடைக்கப்பட்ட ரோகிங்யா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

ரோகிங்யா இனவழிப்புக்குத் துணைபோகும் இந்தியா
பதிப்பு: 2019 ஏப். 20 22:04
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 20 22:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லீம் ஆண்கள் சவுதி அரேபியாவின் ஜேட்டா பகுதியில் உள்ள சிறையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்கள் விடுதலையை வேண்டி தற்போது சில நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பித்த சில நாட்களில் இவர்களில் பலர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூன்றாவது தடவையாக தங்கள் விடுதலையை வேண்டி தற்போது உண்ணாவிரத போராட்டம் செய்கிறார்கள். சவுதி அரேபியாவில் மூன்று லட்சம் ரோகிங்யாக்கள் பல தசாப்தங்களாக அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் எவருமே மியன்மாரின் கடவுச்சீட்டுடன் சவுதி அரேபியாவுக்கு வரவல்லை. ஏனெனில் 1982இல் மியன்மார் இவர்களின் குடடியுரிமையை பறித்துவிட்டது.
 
மியன்மாரின் 1982 குடியுரிமை சட்டத்தில் ரோகிங்யாக்கள் அந்நாட்டின் 135 பிரிவின மக்களில் ஒரு பிரிவினராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் இவர்களுக்குக் கல்வி, வைத்திய வசதி, வேலைவாய்ப்பு எல்லாமே மறுக்கப்பட்டன.

இந்தியாவில் 40,000 ரோகிங்யாக்கள் அகதிகளாக வந்தார்கள். இந்தியா இவர்களை மியன்மாருக்கு திரும்ப அனுப்பியதை பல தன்னார்வ நிறுவனங்கள் கண்டிக்கின்றன. இந்திய உச்ச நீதிமன்றின் கடந்த ஆண்டு ஒக்ரோபர் தீர்ப்பின் பிரகாரம், இந்தியா இவர்களை மியன்மாரிடம் கையளித்தது. இம்மாதிரியான நடவடிக்கைகளால் இந்த நாடுகளும் ரோகிங்யா இனவழிப்புக்கு துணைபோகின்றன எ்னறார் ஒரு ஆர்வலர்.

2012இல் இவர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தபோது ரோகிங்யாக்கள் வங்காள நாட்டுக்கு தப்பியோடினார்கள். மியன்மாரில் ரோகிங்யாக்களுக்கு எதிரான இனவழிப்பு 2016 இல் உச்சத்துக்கு போனது.

2017இல் மியன்மார் இராணுவம் அதன் ராக்கையின் பகுதியில் உள்ள ரோகிங்யாக்களின் மேல் மோசமாக தாக்குதல் நடத்தினார்கள். இதனால் இன்று வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோகிங்யாக்கள் தப்பியோடி வங்காள நாட்டில் அகதி முகாம்களில் அவலமாமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இவர்களே வேலைவாய்ப்பு தேடி வங்காள நாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு்ச் சென்றவர்கள். போலிக் கட்வுச்சீட்டுடன் சமய பிரயாணிகளாகவே இவர்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்றார்கள்.

இதற்காக இவர்கள் முக்கியமாக வங்காள நாட்டு கடவுச்சீட்டை கள்ளமாக எடுப்பார்கள். சிலர் வெவ்வேறு தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நேபால், சிறிலங்கா போன்ற நாடுகளின் கடவுச்சீட்டுகளுடனும் செல்வார்கள்.

சமயப் பிரயாணிகளாக வந்தவர்கள் வேலை எடுத்துக்கொண்டு சவுதியிலேயே தங்கிவிடுவார்கள். சவுதி அரசின் குடிவரவு ஆட்களின் பல இடங்களில் தேடுதல் நட்த்தும் போதே இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

இவர்களின் கைரேகைகள் இவர்களின் கடவுச்சீட்டுடன் பதியப்பட்டு இவர்கள் எங்கு அகதிகளாக பதியப்பட்டிருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் பதியப்பட்ட நாட்டுக்கு அனுப்பப்படலாம். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவர், நாங்கள் அங்கு திரும்ப போக முடியாது. எம்மை விடுதலை செய்யாவிட்டால் நாங்கள் உண்ணாவிரதமிருந்து செத்துபோவோம் என்றார்.

ஐநாவின் அகதிகளுக்கான யுஎன்எச்சிஆர் இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதைப்பற்றி பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் அவர்கள் பெரும் தொகையாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் பற்றி உறுதியான தகவல்களை தேடுகிறோம் என்றறார் ஒரு யுஎன்எச்சிஆர் பிரதிநிதி.

இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பல ரோகிங்யாக்களை சவுதி அரேபியா வங்காள நாட்டிற்கு கட்டாயமாக திரும்ப அனுப்பியிருக்கிறது. வங்காள நாட்டில் இறங்கியதும் அங்கும் இவர்கள் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் 40,000 ரோகிஙங்யாக்கள் அகதிகளாக வந்தார்கள். இந்தியா இவர்களை மியன்மாருக்கு திரும்ப அனுப்பியதை பல தன்னார்வ நிறுவனங்கள் கண்டிக்கின்றன.

இந்திய உச்ச நீதிமன்றின் கடந்த ஆண்டு ஒக்ரோபர் தீர்ப்பின் பிரகாரம், இந்தியா இவர்களை மியன்மாரிடம் கையளித்தது. இம்மாதிரியான நடவடிக்கைகளால் இந்த நாடுகளும் ரோகிங்யா இனவழிப்புக்கு துணைபோகின்றன எ்னறார் ஒரு ஆர்வலர்.

சவுதியில் வாழும் ரோகிங்யாக்களை தடுத்து வைத்தமைக்கும் மேலாக ரோகிஙங்யாக்கள் வேறும் பல மனித உரிமை தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். ரோகிங்யா பெண்கள் சவுதிக்கு கடத்தப்பட்டு அடிமைகளாக சவுதி வீடுகளில் வைக்கப்படுகிறார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தாம் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், வேலை செய்து மியன்மாரிலும் வங்காள நாட்டிலும் வாழும் தம் குடும்பங்களுக்கு பணம் அணுப்ப வேண்டும் என்றுமே கேட்கிறார்கள்.