இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலின் பின்னரான நிலை

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு - ஹிஸ்புல்லா மறுப்பு

அறிக்கை கிடைக்குவரை அலுவலகப் பணியாளர் இருவர் தடுத்து வைப்பு
பதிப்பு: 2019 ஏப். 30 23:16
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மே 02 21:48
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#Batticaloa
#M.L.A.M.Hizbullah
#Governor
#Srilanka
#ISIS
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இலங்கைப் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது 48 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் இலங்கைப் பொலிஸாரால் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் தனது அலுவலகத்திற்கும் அங்கு பணியாற்றிய இரு இளைஞர்களுக்கும் தொடர்பு இல்லையென கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.
 
காத்தான்குடிப் பொலிஸாரால் அதிகாரபூர்வமாக தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ரவைகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக கிஸ்புல்லா இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரின் அறிக்கை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை அலுவலகத்தில் பணியாற்றிய இரு இளைஞர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் அந்த இளைஞர்களுக்கும் தனது அலுவலகத்திற்கும் தொடர்புகள் எதுவுமே இல்லையென அந்த அறிக்கையில் கிஸ்புல்லா கூறியுள்ளார்.