வடமாகாணத்தில்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இலங்கைப் படையினரால் கைது

முள்ளிவாய்கால் நினைவேந்தலைத் தடுக்கத் திட்டமெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 மே 03 16:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 03 16:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் சென்ற உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடமாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கூடுதலான தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் ஈடபட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக வாளகத்திற்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினரும் இலங்கை அதிரடிப்படையினரும் பல்கலைக்கழக ஒனறியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் படங்கள் ஆகியவை மீட்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
 
ஆனால் இந்தக் கைது திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கையென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர். மாணவர் ஒன்றியக் கட்டடம், விடுதி ஆகிய பகுதிகளில் பெருமளவு இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இரண்டு மணித்தியாளங்களுக்கும் அதிகமாக தேடுதல் இடம்பெற்றதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு மாணவர்களையும் இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்ய இலங்கைப் பாதுகாப்பு அமைச்சிடம் கோப்பாய் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.

அதுவரைம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்கால் படுகொலைகளின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை இராணுவத்தினர் இரு மாணவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக யரழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளது.