உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குச் சந்தேகம்

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதாகத் தெரிவிப்பு
பதிப்பு: 2019 மே 04 14:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 06 02:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#zahranhashim
#Srilanka
#EasterAttackSl
#CID
#Srilanka
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் எனக் கூறப்படும், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்படவில்லை. உயிரோடு இருப்பதாக இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியபோது கொல்லப்பட்டதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஏலவே உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதும் ஸஹ்ரான் ஹாசீம் உயிரிழந்து விட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், ஸஹ்ரான் ஹாசீம் உயிரிழக்கவில்லையென இலங்கைப் புலனாய்வுத் துறை தற்போது கூறுகின்றது.
 
ஸஹ்ரான் ஹாசீம் உயிரோடு இருப்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் ஸஹ்ரான் ஹாசீம் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலுக்குச் சென்றிருந்தார்.

ஆனால், ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைதாரியாகச் செயற்பட்டு குண்டை வெடிக்க வைக்கவில்லை. மாறாக குண்டை பொருத்திவிட்டு தப்பித்துச் சென்றிருக்க வேண்டும்.

அல்லது நேரக்கணிப்பு குண்டைப் பொருத்தி வெடிக்கவைத்திருக்கலாம், அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவி மூலம் குண்டை வெடிக்கச் செய்து விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாமென இலங்கைப் புலனாய்வுத்துறை பல வகையான சந்தேகங்களை தற்போது வெளியிட ஆரம்பித்துள்ளது.

குண்டுவெடிப்பில் சிதறிய உடல் பாகங்களுடன் செய்யப்பட்ட மரபணுப் பரிசோதனையில் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்படவில்லை.

அத்துடன் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் படத்துக்கும், ஸஹ்ரான் ஹாசீமின் படத்துக்கும் இடையே வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

இதனால் மீண்டும் வேறு உடல் பாகங்களுடன் மரபணுப் பரிசோதனை ஒன்றைச் செய்யவுள்ளதாக இலங்கைப் புலனாய்வுத் துறை கூறுகின்றது

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பை ஸ்தாபித்த ஸஹ்ரான் ஹாசீம் ஐ.எஸ். இஸ்லாமியவாதிகளின் ஆதரவுடன் தலைமறைவாகச் செயற்பட்டு வேறு தாக்குதல்களை இலங்கையில் நடத்தக் கூடுமெனவும் இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.