உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து

ஸஹ்ரான் ஹாசீம் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றாரா? இலங்கை இராணுவம் கூறுகின்றது

இலங்கை நீதிமன்றக் கட்டளையின் படி சொத்துக்களும் முடக்கம்
பதிப்பு: 2019 மே 07 15:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 07 22:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#zahranhashim
#Srilanka
#India
#Tamilnadu
#SlPolice
#Lka
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் இலங்கைத் தலைவர் ஸஹ்ரான் ஹாசீமுக்குச் சொந்தமான, கொழும்பு தெமட்டகொடை மஹவில கார்டினில் அமைந்துள்ள மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட ஆடம்பர வீட்டை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. குறித்த வீட்டில் உயிரத்த ஞாயிறன்று பிற்பகல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இலங்கைப் பொலிஸார் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சோதனை நடவடிக்கையின்போதே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த ஆடம்பர வீட்டை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்காலிகமாக தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தவுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.
 
இந்த நிலையில் தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவரான ஸஹ்ரான் ஹாசீம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இந்தியாவில் இருந்து வெளியாகும் தி ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

வடமாகாணம் மன்னாரிலிருந்து, தமிழ்நாட்டுக் கடல் வழியாகச் சென்றிருக்கலாமென மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் ஊடாக இந்தியாவின் பெங்களூர், காஷ்மீர் ஆகிய நகரங்களுக்கும் ஸஹ்ரான் ஹாசீம் சென்றிருக்கலாமெனவும் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, ஏழு பில்லியன் ரூபா சொத்துக்களையும், 140 மில்லியன் ரூபா பணத்தையும் முடக்கி வைப்பதற்கு இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு , கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற உத்தரவையும் பெறவுள்ளது.

கொழும்பு ஷங்ரிலா தற்கொலைக் குண்டுதாரி மொகமட் இல்ஹாமுக்குச் சொந்தமான, வெல்லம்பிட்டியவில் உள்ள செப்புத் தொழிற்சாலை, ஸஹ்ரான் காசீமின் தெமட்டகொட ஆடம்பர வீடு, காணிகள், இரத்தினக்கற்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை, நீதிமன்றக் கட்டளையைப் பெற்று இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.