வடமாகாணத்தின்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி நியமனம்

கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றாமையே விக்னேஸ்வரன் பதவி நீக்கப்பட்டதற்கான காரணம் என தகவல்
பதிப்பு: 2019 மே 08 15:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 08 21:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Competent
#Authority
#Kandasamy
#UniversityofJaffna
#UOJ
#ViceChancellor
#lka
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் திடீரென பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற விரிவுரையாளராவார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

உபவேந்தராக கடமையாற்றிய விக்னேஸ்வரன் தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமையினாலேயே பதவி நீக்கப்பட்டதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.