வடமேல் மாகாணம்

சிலாபத்தில் சிங்கள, முஸ்லிம் மோதல் - கட்டுப்பாட்டில் என்கிறது இலங்கைப் பொலிஸ்

ஐ.எஸ் தலைமைக்கு காணொளி அனுப்பிய நபர் மாத்தளையில் கைது
பதிப்பு: 2019 மே 12 23:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 13 10:01
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Easterattacklk
#ISIS
#Srilanka
#Colombo
#lka
#Chilaw
#Sinhala
#Muslim
இலங்கையின் வடமேல் மாகாணம் சிலாபம் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். முகநூலில் வெளியான பதிவு ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்ட சிங்கள இளைஞர்கள் சிலர் சிலாபம் நகரில் உள்ள வர்த்தகர் ஒருவருடன் தர்க்கம் புரிந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இலங்கைப் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இலங்கை முப்படையினரும் சிலாபம் நகரில் குவிக்கப்பட்டனர். பிற்பகலில் இருந்து நாளை திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி வரையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் நூறு கிலோமீற்றர் தொலைவில் சிலாபம் நகரம் அமைந்துள்ளது.

இதேவேளை, ஸஹ்ரான் தலைமையிலான இஸ்லாமியவாதக்குழு உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தாக்குதலுக்கு முன்னர் தற்கொலைதாரிகள் ஒன்றாகச் சேர்ந்து செய்து கொண்ட உறுதிமொழி தொடர்பான காணொளியை, ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தலைமைக்கு அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தளைப் பிரதேசத்தில் வைத்து கடந்த எட்டாம் திகதி சந்தேக நபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கைதான நபர் கட்டார் நாட்டில் இருந்து கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். ஏப்ரல் 19 ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்குச் சென்றிருந்தார்.

தற்கொலைதாரிகள் செய்துகொண்ட உறுதிமொழி அடங்கிய காணொளியை இந்த நபர் அனுப்பிய பின்னரே, ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தலைமை, இலங்கைத் தாக்குதலுக்கு உரிமை கோரியதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.