உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இலங்கையில்

முஸ்லிம் கிராமங்களில் 24 மணிநேரத் தாக்குதல் - சிங்கள இளைஞர்கள் கைவரிசை

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதே தாக்குதல் - முஸ்லிம்கள் விசனம்
பதிப்பு: 2019 மே 13 23:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 14 21:02
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Easterattacksl
#Srilanka
#lka
#Muslim
#Sinhalese
#kurunegala
#Policecurfew
ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தற்கொலைத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வட மேல் மாகாணம் குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி, நிக்கவரட்டிய ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று திங்கட்கிழமை மாலை வரை இடம்பெற்ற தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரண்டு பிரதேசங்களையும் மையப்படுத்திய சுமார் முப்பது முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரை சுமார் 24 மணிநேர தாக்குதல் சிங்கள இளைஞர் குழுக்களினால் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதே கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
இதுவரை ஐந்து ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட ஒன்பது பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்கள் பலவற்றுக்கு தீயிடப்பட்டுள்ளதாகச் சுயாதீனத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் புத்தளம் சிலாபம் குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹெட்டிப்பொல, அனுக்கான் கிராமத்தில் முஸ்லிம்களின் வீடுகள் பல தீயிடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

மில்லேகொட, கலப்பிட்டியகம ஆகிய பிரதேசங்களிலும் நான்கு பள்ளிவாசல்கள், வீடுகள் அடித்து நொருக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளன.

இதனால் அந்தக் கிராமங்களில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வயல் வெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். வேறு சிலர் கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இன்றிரவு ஒன்பது மணியில் இருந்து நாளை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களை உடனடியாக நிறுத்துமாறு ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சா்கள் கேட்டுக் கொண்டபோதும் ரணில் விக்கிரமசிங்கவோ, அமைச்சர்களோ எவரும் வாய்திறக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குற்றம் சுமத்தியுள்ளார்.