இனஅழிப்பு போர் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில்

வடக்கில் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றல்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்தும் மீட்பு நடவவடிக்கை
பதிப்பு: 2019 மே 14 07:07
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 14 09:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Landmine
#Srilanka
#Lastwar
#Kilinochchi
#Mullaituvu
#lka
#Mukamalai
இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்னிவெடிகளை அகற்கும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதற்கமைய 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சர்வதேச மற்றும் உள்ளுர் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2019 ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுரமீற்றர் பரப்பளவில் (802,206) இருந்து பதினெட்டாயிரத்து எண்பத்து இரண்டு (18,082) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையின் மத்தியிலும் முகமாலை பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் இடம்பெற்ற பகுதிகளில் கண்னிவெடிகள் மீட்கப்பட்டு குறித்த பகுதிகள் மக்கள் குடியேறுவதற்கு உகந்தவை என விடுவிக்கப்பட்டு மக்கள் தமது காணிகளில் மீளக்குடியேறிய பின்னர், அப்பகுதிகளிலிருந்து வெடிக்காத நிலையில் கண்னிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த வெடிபொருட்கள் வெடித்ததால் மக்கள் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சம்பவங்கள் வடபகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.