உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்தது

ரஷியாவிடம் இலங்கை ஆலோசனை - அமைச்சர் ஒலேக், தூதுவர் தயான் சந்திப்பு

ரஷியாவில் பரவிய வகாபியிசம் ஏற்படுத்திய தாக்கங்கள் அனுபவங்கள் பற்றி எடுத்துரைப்பு
பதிப்பு: 2019 மே 14 10:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 14 21:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Russia
#Srilanka
#Easterattacklk
#ISIS
#Terrorism
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து இஸ்லாமியவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உதவியளித்து வரும் நிலையில், ரஷிய அரசுடனும் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலமை குறித்து ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ் - இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ், ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
 
இஸ்லாமியவாதிகளினால் ரஷியா எதிர்கொண்ட அனுபவங்களை அவர் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலகவிடம் எடுத்துக் கூறியதாக இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரஷியாவில் பரவிய வகாபியிசம் ரஷியாவில் ஏற்படுத்திய பிரச்சினைகள், அதன் தீவிரவாதத் தன்மைகள் போன்றவற்றை எதிர்கொண்ட முறைகள் பற்றி பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ் இந்தச் சந்திப்பில் எடுத்து விளக்கினார்.

ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்றுள்ளதால் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளது எனவும், ஆனாலும் எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தூதுவர் தயான் ஜயதிலகவும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், 1991 ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் யூனியன் அரசு செயற்பட்ட காலத்தில் கே.ஜி.பி என அழைக்கப்பட்டு பின்னர், எவ்.எஸ்.பி ரஷிய சமஷ்டிப் புலனாய்வு சேவை அமைப்பின், பிரதி பணிப்பாளராகத் திகழ்ந்தார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை டி.கே.ஆர் எனப்படும், புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். தற்போது ரஷிய இராணுவத்தின் ஜெனரல் தரநிலையிலும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.