பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு
பதிப்பு: 2019 மே 16 10:20
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 16 11:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Jaffnauniversity
#students
#Bail
#UOJ
#Easterattacklka
#LTTE
இலங்கை அரசின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான மாணவர் ஒன்றிய தலைவர் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 10 ஆம் திகதி வெ்ள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில், மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மருத்துவபீட மாணவனான ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த தியாகி திலீபனின் புகைப்படம் சிற்றுண்டிச்சாலையில் காணப்பட்ட குற்றச்சாட்டில் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இரு தடவைகள் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கான பிணை மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.