இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட நிலையிலும்

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென மைத்திரி உத்தரவு

தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மகாநாயக தேரர்களைச் சந்தித்தும் பயனில்லை
பதிப்பு: 2019 மே 26 21:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 27 20:02
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#USA
#Maithripalasrisena
#Thilakmarapana
#SofaAgreement
#AlainaTeplitz
#USAmbassador
#lka
#Colombo
சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கூறியுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துடன் அமெரிக்கா செய்யவுள்ள ஒப்பந்தங்களுக்கு கண்டி, மல்வத்து பௌத்த பீடாதிபதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சென்ற 23 ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்து விளக்கமளித்திருந்தார். ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை மாறுபடாதெனவும் அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டாமென மைத்திரிபால சிறிசேன திலக் மாரப்பனவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கின்றார் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் நிலையில் தன்னுடைய அனுமதியின்றி அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய முடியாதெனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

சோபா உடன்படிக்கை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகள் கொழும்பில் பேச்சு நடத்தியிருந்தனர். ரணில் அரசாங்கமும் அந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைச் செய்து கையொப்பமிட முடிவு செய்திருந்தது.

சென்ற 16 ஆம் திகதி வொஷிங்டனில் அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளோடு நடத்திய கலந்துரையாடலிலும் சோபா ஒப்பந்தம் குறித்துப் பேசியிருந்தார்.

பௌத்த தேசியவாதத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையையும் தொடர்ச்சியாகத் தக்க வைக்கும் நோக்கில் இவ்வாறான இரு வகையான அணுகு முறைகளையும், பல்வகைப்பட்ட முகங்களையும் சர்வதேச அரங்கில் இலங்கை வெளிப்படுத்தி வருவதாகவே அவதானிகள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு, படைகளுக்கான ஒத்துழைப்பு, ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கிய சோபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென அமெரிக்க உயர் அதிகாரிகள் வொஷிங்டனில் வலியுறுத்தியிருந்தனர்.

கொழும்பு திரும்பிய அமைச்சர் திலக் மாரப்பன மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். இதன்போது தனது அனுமதியின்றி எந்தவொரு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட வேண்டமென கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சென்ற வாரம் சந்தித்து விளக்கமளித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும். இலங்கையின் முன்னாள் பாதகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணிவருகின்றார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பதை அமெரிக்காவும் விரும்புகின்றது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கின்றார் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் சிங்களத் தலைவர்கள், சீனாவுடன் உறவைப் பேணுகின்ற அதேவேளை, அமெரிக்காவுடனும் நல்லுறவைப் பேணவே விரும்புவார்கள் என்பது கடந்தகால வரலாறுகள்.

பௌத்த தேசியவாத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையையும் தொடர்ச்சியாகத் தக்கவைக்கும் நோக்கில் இவ்வாறான இரண்டு வகையான அணுகுமுறைகளையும், பல்வகைப்பட்ட முகங்களையும் சர்வதேச அரங்கில் இலங்கை வெளிப்படுத்தி வருவதாகவே அவதானிகளும் கூறுகின்றனர்.