இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் போட்டி

இலங்கையுடன் சீன அபிவிருத்தி வங்கி ஒப்பந்தம்- 500 மில்லியன்கள் அமெரிக்க டொலர் நிதியுதவி

இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்த கோட்டாபய ராஜபக்ச வகுத்த உத்தி
பதிப்பு: 2020 மார்ச் 18 22:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 19 08:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#China
#Development
#Bank
கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கம், சீன அபிவிருத்தி வங்கியுடன் (China Development Bank) (CDB) ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறக் கூடிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகள் கடன் திட்ட அடிப்படையிலேயே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சீன அபிவிருத்தி வங்கி ஒரு பில்லியன் நிதியை கூட்டுக் கடன் (syndicated loan) திட்ட அடிப்படையில் வழங்கியிருந்தது. ஆனாலும் அ்ந்தக் கடனு்க்கான கால எல்லையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் எட்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளன.
 
அமெரிக்காவும் இந்தியாவும் சொல்வதையே தமிழ்த் தரப்புகள் கேட்கின்றன. இருப்பினும் சிங்கள அரசியல் தலைவர்களை சமாதானப்படுத்தக் கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தையே ஈழத் தமிழர்கள் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதனையே இந்தியா அமெரிக்காவுக்கும் இடித்துரைக்கிறது

ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 468 கோடியே 36 இலட்சத்து 61000 ஆயிரம் ரூபாய்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு (Vote and Account) ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் நிதிப் பற்றாக்குறை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றின் எதிர்ப்பினால் பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கணக்கு வாக்கெடுப்பு ஒன்றை இலங்கை அரசாங்கம் நடத்தக் கூடிய அளவுக்கு இந்த நிதியுதவி போதுமானதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த நிதியை சீன அபிவிருத்தி வங்கி கையளிக்கவுள்ளது.

அதற்குரிய வகையில் இந்த நிதியுதவிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் சென்ற பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 468 கோடியே 36 இலட்சத்து 61000 ஆயிரம் ரூபாய்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு ஒன்று நடத்த ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டிருந்தது.

பாரிய நிதி நெருக்கடி ஒன்றை இலங்கை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி மாத இறுதியில் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுமிருந்தார்.

இந்த நிலையில் சீன அபிவிருத்தி வங்கி மூலம் பெறப்படவுள்ள ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி 2020 ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலமான அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமென இலங்கை நிதியமைச்சு கூறியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்திருந்த நிலையில் அதற்கான ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. எனவே நம்ப வைத்து ஏமாற்றும் குழப்பமான அரசியல் அணுகுமுறையொன்றை இலங்கை அரசு கையாண்டு, தமது அரசியல் பொருளாதார நலன்களைப் பெறுவதை அமெரிக்கா அறியாமல் இருக்க வாய்ப்பில்லையெனவும் கூற முடியாது.

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்திருந்த நிலையில் அதற்கான ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. எனவே நம்ப வைத்து ஏமாற்றும் குழப்பமான அரசியல் அணுகுமுறையொன்றை இலங்கை அரசு கையாண்டு, தமது அரசியல் பொருளாதார நலன்களைப் பெறுவதை அமெரிக்கா அறியாமல் இருக்க வாய்ப்பில்லையெனவும் கூற முடியாது

அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாதென கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது நேரடியாகவே கூறியிருந்தார். சஜித் பிரேமதாசவும் அவ்வாறே சொல்லியிருந்தார். ஜே.வி.பியும் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் சீன அபி்விருத்தி வங்கியிடம் இருந்து ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக இலங்கை அரசாங்கம் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன் (Brock Bierman) அவரைச் சந்தித்து உரையாடியிருந்தார்.

அப்போது இந்த நிதியுதவியைப் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டிருந்தார். அமெரிக்கப் பின்புலத்துடன் ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள கோட்டாபய ராஜபக்ச அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துள்ள நிலையில், தற்போது சீனாவுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் நிதியுதவி, பௌத்த கலச்சார உறவுகளின் அடிப்படையில் சீனாவையும் ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை மேலும் சிதைக்க அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளையும் கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்துகிறார் என்ற கருத்துகளும் உண்டு.

2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட தற்போதைய இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமாரிக்கா பயணத் தடை விதித்திருந்தது. கோட்டாபய ராஜபக்சவை தமது பக்கம் மேலும் சாய்க்கும் உத்தியாகவும் MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்துடனான ஒப்பந்தத்தைக் கைச்சாதிடுவதற்கான அழுத்தமாகவுமே அந்தத் தடைய நோக்க முடிந்தது.

ஆனால் அந்தத் தடைக்கு எதிரான செயற்பாடாகவும் ஈழத் தமிழர் விவகாரத்தில், இலங்கை சொல்வதையே அமெரிக்கா கேட்க வேண்டும். அல்லது இந்தியாவைக் கடந்து அமெரிக்க இலங்கையோடு அரசியல் பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் சீன அபிவிருத்தி வங்கிக்கியுடனான இந்த ஒப்பந்தத்தை அவதானிக்க முடிகிறது.

சென்ற பெப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம் இந்தியாவுக்கு வந்து சென்ற நிலையில், அமெரிக்கா இந்தியாவுக்குக் கூட்டாளி என்ற அந்தஸ்த்தை வழங்கவுள்ளது என்பது வெளிப்படை. அவ்வாறு அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாளியாகிவிட்டால் இந்தோ- பசுபிக் பிரந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கம் மேலோங்கும்.

நிதியுதவி, பௌத்த கலாச்சார உறவுகளின் அடிப்படையில் சீனாவையும் ஈழத் தமிழ் மக்களின் எழுது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை மேலும் சிதைக்க அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளையும் கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்துகிறார் என்ற கருத்துகளும் உண்டு

அத்துடன் இலங்கை விவகாரத்தில் இந்தியா சொல்வதையே அமெரிக்கா கேட்கும். ஆகவே இது இலங்கைக்கு ஆபத்தாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இந்த இடத்திலேதான் ஈழத் தமிழர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாளக் கூடிய அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்காவும் இந்தியாவும் சொல்வதையே தமிழ்த் தரப்புகள் கேட்கின்றன. இருப்பினும் இலங்கை அரசாங்கத்தையும் சிங்கள அரசியல் தலைவர்களையும் சமாதானப்படுத்தக் கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தையே ஈழத் தமிழர்கள் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதனையே இந்தியா அமெரிக்காவுக்கும் இடித்துரைக்கிறது.

ஆனால் அந்தப் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக ஈழத் தமிழர்கள் ஏற்கவில்லை. எனினும் அந்தச் சட்டத்தைக் கூட நீக்க வேண்டும் என்பது கோட்டாபய ராஜபக்சவின் நோக்கம். அதற்காகவே இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு உறவு வைப்பதற்குச் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவது போன்றதொரு தோற்றப்பாட்டை இலங்கை அரசு வெளிப்படுத்துகிறது.

ஏனெனில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30.1 தீர்மானத்திலும் 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியல் தீர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தியாவின் அழுத்தமே காரணமென இலங்கைக்கு நன்கு தெரியும். அந்தத் தீர்மானத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறியதற்கும் அதுவே காரணம். ஜெனீவாவில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைச் சாதகமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்சவின் அணுகுமுறை அமைந்துள்ளதெனலாம்.