பதின்மூன்றில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதில் வேறுபடும்

விக்னேஸ்வரன், மோடியினதோ, இந்தியாவினதோ செல்லப்பிள்ளை அல்ல

2015 இல் மோடி இலங்கைக்குச் சொன்னதென்ன?, விக்கி மோடிக்குச் சொன்னதென்ன?
பதிப்பு: 2022 ஜன. 30 03:39
புதுப்பிப்பு: ஜூன் 06 17:27
2015 இல் தனது வடக்கு விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட மாகாண முதலமைச்சர் க வி விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது
2015 இல் தனது வடக்கு விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட மாகாண முதலமைச்சர் க வி விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் இந்தியாவின் அல்லது மோடியின் சொல்லுக்கும் விருப்புக்கும் மட்டும் இயங்கும் நிலையில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால், தனது கட்சியிலும், கூட்டிலும் கலந்தாலோசிக்காது, அதுவும் சம்பந்தனும் சுமந்திரனும் முடிவு எடுக்க முன்னதாக, அவர் ஏன் பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாகக் கொள்வதாகத் திண்ணைக் கூட்டத்தில் தனது கட்சியைப் பங்கேற்கச் செய்தார், ஏன் கடைசிவரை காத்திருக்காது அவசரப் பட்டார் என்றும், இந்தியாவை விடவும் வேறு எங்கேனும் இருந்து அவருக்கு அறிவுறுத்தல் வந்தமையாற் தான் அவர் அவ்வாறு செய்தாரா என்றும் அரசியல் வட்டாரங்களிற் கேள்விகள் எழுந்துள்ளன.
 
குஜராத்தின் முதலமைச்சராக இருந்து, பின்னர் ஒரு வருடத்துக்கும் உள்ளாகவே இந்தியப் பிரதமராக அப்போது இருந்திருந்த நரேந்திர மோடி, 13 மார்ச் 2015 இல் இலங்கைப் பாராளுமன்றில் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில், அவர் இலங்கைக்குக் கொடுத்த அறிவுரை "கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவம்" என்பதாகும்.

(ஒன்பது நிமிடம், 14 செக்கனில் இருந்து பார்க்கவும்)

அந்த உரைக்கு அடுத்த நாளான 14 மார்ச் 2015 இல் மோடி விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது, யாழ் பொது நூலகத்தில் விக்னேஸ்வரனை உரையாற்றாது செய்ய இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் சிலர் முற்கூட்டியே முயற்சி எடுத்தும் மோடியால் அதை உதாசீனம் செய்யமுடியாதிருந்தது.

அங்கு விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் முன்னிலையில், ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில், மோடிக்கு, பதின்மூன்றாம் திருத்த மாகாண சபை அதிகார முறைமை எவ்வாறு குறைபாடுடையது என்று பின்வருமாறு எடுத்துச்சொன்னதோடு, குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கையில் அவரால் இயங்க முடிந்தமை போலத் தம்மால் இயங்கமுடியாது உள்ள நிலையைப் பகிரங்கமாகவும் துணிவாகவும் ஒப்புநோக்கி எடுத்தியம்பியிருந்தார்.

அது மட்டுமல்ல, இலங்கையின் அரசியல் அமைப்புக்கு அப்பால் இருந்தே அரசியற் தீர்வைக் காண முடியும் என்றும் அங்கு அவர் அடித்துக் கூறினார்.

இதோ, அவர் சொன்னது அப்படியே, அச்சொட்டாக, கீழே தரப்படுகிறது:

"The emaciated Thirteenth Amendment has not brought the required and expected devolution to the North and East.

"Even today parallel administrative structures exist one directed by the Centre and the other by the Province despite the appointment of an amiable Governor!

"Our former President in May 2009 released a joint statement with the UN Secretary General during latter’s visit to Sri Lanka relating to the core issues and post war context and the causes of the conflict.

"Later in January 2010 he promised Mr.Manmohan Singh, your predecessor, that he will go beyond the Thirteenth Amendment. Hence, it is time that we take note of the commitment expressed by the then Sri Lankan Head of State, consider our post war context, needs, priorities and concerns and move forward with the active support of your friendly Country under your leadership.

"We seek positive action to be taken to resolve our problems. May I suggest Sir, that there be talks among the Indian Government, Sri Lankan Government and the NPC and the EPC without taking refuge under the current constitutional provisions and protocols to find ways of resolving the central problem of the Tamil speaking people in an innovative and creative manner bearing in mind the root causes of our ethnic conflict and post war needs and priorities of the people of the Northern and Eastern Provinces?

"We seek justice and fair play to be established in the political arena and the constitutional framework in Sri Lanka to live with equity, equality and dignity."