46/1 கதாநாயகன் பிரித்தானியா, ஆனால் அடுத்த கதாநாயகன் அமெரிக்கா

இலங்கை தொடர்பான '13ஆம்' இராஜதந்திரம் பிரித்தானியாவில் இருந்தே கையாளப்படுகிறது

பிரித்தானியா 13ஆம் சட்டத்திருத்தம் தொடர்பாக தீர்மானத்தில் சொல்லியிருப்பது என்ன
பதிப்பு: 2022 ஜன. 30 03:55
புதுப்பிப்பு: மே 16 13:45
Indian minister of commerce and industry, Piyush Goyal, and Britain’s international trade secretary, Anne-Marie Trevelyan, opened talks in January 2022
Indian minister of commerce and industry, Piyush Goyal, and British international trade secretary, Anne-Marie Trevelyan, opened talks in January 2022
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
2021 செப்ரம்பரில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து AUKUS எனும் இராணுவ வியூகத்தை ஏற்படுத்தியுள்ளன. குவாட் (Quad) கூட்டில் இருக்கும் ஜப்பானும் இந்தியாவும் AUKUS கூட்டில் இல்லை. எனினும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்தியாவுடன் நேரடியான இராணுவ ஒப்பந்தங்களை நெருக்கமாகப் பேணுகின்றன. இந்த நிலையில், இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வையும், சர்வதேச மனித உரிமை விடயத்தையும் இணைத்துக் கையாளும் 46/1 தீர்மானத்தின் அடுத்த கட்டத் தலைவிதி எதிர்வரும் செப்ரம்பர், ஒக்ரோபரில் தீர்மானிக்கப்பட முன்னர் அமெரிக்காவும் மனித உரிமைப் பேரவைக்குள் மீண்டும் 2022 இல் சேர்ந்துகொண்டுள்ளது.
 
எதிர்வரும் தீர்மானத்தின் வீச்சை மேலும் குறைத்து, இலங்கையோடு சேர்ந்து, முன்னர் (2015) போலவே மீண்டும் அமெரிக்கா இவ்வருட இறுதியிலும் நிறைவேற்ற இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவானது 2024 வரை மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கவுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் மனித உரிமைப் பேரவையில் இருந்தே வெளியேறியிருந்த அமெரிக்கா மீண்டும் 2022 ஜனவரியில் இணைந்து கொன்ண்டது.

கடந்த தீர்மானத்தைப் பிரித்தானியாவே தலைமை தாங்கி நிறைவேற்றியிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன்னதாக, 46/1 தீர்மானம் போடப்படுவதற்க்கும் முன்னதாக, ஜனவரியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளும் சிவில் மற்றும் மதத் தலைவர்களும் இணைந்து ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (TMTK), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஆகிய மூன்று கூட்டுகளும் இன அழிப்புக் கெதிரான சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தன.

இந்த 47 நாடுகளில் அப்போது பிரித்தானியாவும் இந்தியாவும் உள்ளடங்கியிருந்தன.

ஆனால் தீர்மானம் தமிழர்கள் எதிர்பார்த்தது போல் அன்றி மிகவும் பலவீனமான ஒன்றாகவே வெளிப்பட்டது.

இத் தீர்மானம் 13 ஆம் சட்டத்திருத்தம் பற்றிச் சொல்லியிருப்பது வருமாறு:

"Calling upon the Government of Sri Lanka to fulfil its commitments on the devolution of political authority, which is integral to reconciliation and the full enjoyment of human rights by all members of its population, and encouraging the Government to respect local governance, including through the holding of elections for provincial councils, and to ensure that all provincial councils, including the northern and eastern provincial councils, are able to operate effectively, in accordance with the thirteenth amendment to the Constitution of Sri Lanka,"

இந்தவொரு நிலையிலேயே 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தித் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு சென்ற ஆறாம் திகதி கடிதம் அனுப்பியுள்ளன.

அது மட்டுமல்ல, கடந்தமுறை 13 ஆம் சட்டத்திருத்தத்தை வலியுறுத்தும் 46/1 தீர்மானம் வந்தபோது இந்தியா ஆதரித்தும் வாக்களிக்கவில்லை, எதிர்த்தும் வாக்களிக்கவில்லை.

ஆக, பதின்மூன்றை வலியுறுத்தச் சொல்வது இந்தியா மட்டும் அல்ல. கூடவே பிரித்தானியாவும் சேர்ந்தே தற்போது இதன் பின்னால் மும்முரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியாவை மட்டும் தனித்துக் கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டுவது போன்ற நிலை தோன்றியிருக்கிறது.

ஈழத் தமிழ் மக்களுக்கு முழு உண்மையையும் அனைத்துக் கட்சிகளும் வெளிப்படுத்தத் தயங்குகின்றன என்பதே உண்மையாகும்.