பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரங்கள்-

அரச ஊழியர்களின் எண்ணிகை 13 பேருக்கு ஒருவர், இதுவே பாரிய சிக்கல் என்கிறார் அலி சப்ரி

தமிழர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி அரச மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
பதிப்பு: 2022 மே 20 22:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 23 00:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுக்கு ஆதரவான உறுப்பினர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படட தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சூடான விவாதம் நடைபெற்றது. வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென அரசதரப்பு உறுப்பினர்களான அஜித் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைக்குக் குண்டர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வன்முறைகள் ஆரம்பித்ததாக சரத் பென்சேகா. ஜயமான பண்டார ஆகியோர் குற்றம் சுமத்தினர்.
 
Twetter
முப்பது வருடப் போரை வெற்றிகொண்டோம். ஆனால் நாட்டை இழந்து விட்டோம் என்று ஒருவர் சிங்கள சமூகவலைத்தளத்தில் பதிவிட, மற்றையவர் அது போர் வெற்றியல்ல என்றும், சொந்த மக்களைக் கொலை செய்ய அனுமதித்து விட்டுப் பின்னர் ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகத்துக்கு அனுமதியளித்துவிட்டோம் எனவும் பதிவிட்டுள்ளார்.
ஆனால் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைக்குக் குண்டர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வன்முறைகள் ஆரம்பித்ததாக சரத் பொன்சேகா, ஜயமான பண்டார ஆகியோர் குற்றம் சுமத்தினர்.

இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நாமல் ராஜபக்சவும் வன்முறைகள் பற்றிக் கவலை வெளியிட்டதுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் முழுமையான விசாரணைக்குத் தான் ஒத்துழைப்பதாகவும் கூறினார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் உள்ளிட்ட தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மாறி மாறிக் குற்றம் சுமத்தினர்.

அதேவேளை, இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் நூற்றுப் பதின்மூன்று பேருக்கு ஒரு அரச ஊழியர் என்ற வீதத்திலேதான் இருந்தது. ஆனால் இன்று பதின்மூன்று பேருக்கு ஒரு அரச ஊழியர் இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுதான் பாரிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு, இலங்கைக்கு அந்நியச் செலவாணிகளைப் பெறக்கூடிய மூன்று துறைகளும் இன்று முற்றாகச் செயலிழந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டார். அந்த மூன்று துறைகளும் எதுவென்று அலி சப்ரி கூறவில்லை.

ஆனால் தேயிலை. தைத்த ஆடை உற்பத்தி ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய மூன்றுமே இலங்கையின் அந்நியச் செலவாணியை ஈட்டும் பிரதான துறைகள் என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கில் செய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றியளிப்பதில்லை என்ற தொனியில் சில மறைமுகப் பாிந்துரைகளும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அறிக்கையில் காணமுடியும்.

தேசிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் துறைகளில் அரசியல் இருக்கக்கூடாது என்ற பாிந்துரை இலங்கை மத்திய வங்கி அறிக்கையிலும் சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு அரச ஊழியர்களின் அதிகரித்த எண்ணிக்கைதான் காரணம் என்று அலி சப்ரி குற்றம் சுமத்தியதில் நியாயங்கள் இருக்கலாம்.

ஆனாலும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, முதலீட்டு அபிவிருத்திச் சபைகளின் அறிக்கைகளில் இருந்து மறைமுகமாக வெளிப்படும் சாராம்சத்தின் பிரகாரம், அரசியல் நோக்கில் உருவாக்கப்படும் செயல்திறன் அற்ற முகாமைத்துவ முறைகள் (Ineffective management methods) மீதே குற்றம் சுமத்தப்பட வேண்டும்.

இலங்கையில் பதினொரு வருடங்கள் நிதியமைச்சராக இருந்த றொனி டி மெல், 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் கூறிய முக்கியமான தகவல் என்னவென்றால், ”இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. ஆகவே இலங்கையின் ஏற்றுமதித்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்.” என்றார். ஐந்து ஆண்டுகால போரினால் இழந்த அபிவிருத்திகள் பற்றியும் விபரித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வின் மூலம் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் வருமானம் அதிகரிக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் றொனி டி மெல் பெருமைப்பட்டார். ஆனால் அவர் கூறியது சாத்தியப்படவில்லை. போர் மீளவும் ஆரம்பித்துவிட்டது.

ஆகவே இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவதானிக்கப்பட்ட விடயம் என்னவென்றால், அரச தரப்பு 1983 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகமூட்டியது. எதிர்த்தரப்பு ராஜபக்ச அரசாங்கம் நடத்திய போரையும் வன்முறைகளையும் சுட்டிக்காட்டிக் கொலைகள். வன்முறைகள் பற்றியும் விபரித்தது.

மாறி மாறி ஒருவர் மீது ஒருவர், அதாவது நீங்களா, நாங்களா கொலை செய்தோம், வன்முறையைத் தூண்டினோம் என்ற தொனியில் பழயை கதைகளை அவிட்டுவிட்டு வாதிட்டனர்.

ஆனால் எவருமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றோ, இன்றைய நெருக்கடிக்கு இனரீதியான அரசியல் - பொருளாதாரத் திட்டங்கள் காரணம் என்றோ கூறவேயில்லை. பலரும் அதனை ஏற்க மறுக்கின்றனர் என்பதையே அவர்களின் உரைகளில் இருந்து அறிய முடிகின்றது.

ஆனால் 1987 இல் றொனி டி மெல் உண்மையைச் சொல்லியிருக்கிறார். போர்தான் சிங்கள ஆட்சியாளர்களிடையே ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் போன்றவை அதிகரிப்பதற்கான துணிவைக் கொடுத்ததாகச் சிங்கள சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிடுகின்றனர்.

ஆகவே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற யோசனைகள் எதுவுமேயில்லாமல் வெறுமனே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து 21 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றியே சிங்கள அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர்.

மகாவம்ச மன நிலையில் இருந்து விடுபட்டு இனப்பிரச்சினையும் தீர்க்கப்படுமானால். பொருளாதார அபிவிருத்தி இயல்பாகவே முன்னேறும் என்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் இந்த நெருக்கடி நிலையிலும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனம்.

அரச ஊழியர்களின் எண்ணிக்கைதான் காரணம் என்ற குற்றச்சாட்டை மாத்திரம் முன்வைக்காமல். நேர்மையாக அரசியல்வாதிகள் சிந்திக்கத் தவறுகின்றனர்.

”புத்தபெருமான் வந்த நாடு“ என்று கூறி, பௌத்ததேசிய மன நிலையினால் ஏற்படும் பிரதிபலிப்புகளை அலி சப்ரி தனது உரையில் மறைமுகமாகச் சொல்லாமல் சொல்லிச் சுட்டிக்காட்டியுள்ளார்.