மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் நிரம்பிவழியும் இரட்டைத்தன்மை

பச்சலெற் கோட்டபாயாவைக் குறிப்பெடுத்து பீரிஸை ஆமோதிக்கிறார்

தமிழரின் முக்கிய நிலைப்பாடுகள் புறக்கணிப்பு
பதிப்பு: 2021 செப். 14 14:21
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 10:32
Michelle Bachelet
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் தமக்குத் தந்திருக்கும் தகவல்களை ஏற்றுக்கொள்ளும் மன நிலையோடு, அதாவது ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தந்திருக்கும் தகவல்களை ஆமோதிப்பதாக (acknowledge) பச்சலேற் அம்மையார் இரட்டை நிலையெடுத்துத் தனது வாய்மூல அறிக்கையில் கூறியுள்ளார்

அதேவேளை இலங்கை அரசாங்கம் தமக்குத் தந்திருக்கும் தகவல்களை ஏற்றுக்கொள்ளும் மன நிலையோடு, அதாவது ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தந்திருக்கும் தகவல்களை ஒப்புக்கொள்வதாக (acknowledge) பச்சலேற் அம்மையார் இரட்டை நிலையெடுத்துத் தனது வாய்மூல அறிக்கையில் கூறியுள்ளார்.

அதாவது தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற காணி அபகரிப்புகள், பௌத்தமயமாக்கல், மரபுரிமைப் பண்பாட்டு அழிப்புப் போன்ற இன அழிப்புக் குறித்த எதனையுமே ஆணையாளர் குறிப்பெடுக்கக் (note) கூடத் தவறியுள்ளார்.

மாறாக, ஜூன் மாதத்தில் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியையும் கோட்டாபாய சொன்ன "அர்ப்பணிப்பு" பற்றியும் குறிப்பெடுத்திருக்கிறார்.

நேற்று, திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு ஆரம்பமாகியது. இதன்போது ஆணையாளர் வெளியிட்டுள்ள வாய்மொழிமூல அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பையும் அதன் நீதித்துறையையும் ஏற்றுக்கொள்ளும் தோரணையில் இலங்கை அரசாங்கம் கூறிய உள்ளகப் பொறிமுறையை ஆமோதித்துக்கொள்ளும் தொனியில் பச்சலெற் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை கோட்டாபய ராஜபக்ச சந்தித்தாரெனவும் அது பற்றியும் தான் குறிப்பெடுத்திருப்பதாகக் கூறியிருக்கும் அவர், இராணுவ மயமாக்கலினால் ஏற்படும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் பாதிப்புக்கள், சமூகப் பொருளாதார ஆட்சி பற்றிய சவால்களுக்கு மத்தியில் மேலும் சிக்கலடைந்திருப்பதை அவதானிப்பதாகக் கூறுகிறார்.

இலங்கையில் நீதி நிர்வாகம், ஆட்சித்தன்மை ஆகியவை நடைமுறையில் சீரழிந்தே சென்றுகொண்டிருப்பதையும் அவர் தனது வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டி, ஆழ்ந்த அவதானிப்பு, அக்கறை மற்றும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறார்.

இப்படி, இரட்டை நிலை நிரம்பியதாக அவர் முன்வைத்திருக்கும் ஆங்கில வாய்மூல அறிக்கையின் முழுவடிவமும் இந்தக் கட்டுரையின் முடிவில் தரப்படுகிறது. வாசகர்கள் தாமே ஒப்பு நோக்கி, கூர்மை முன்வைக்கும் இந்த முக்கிய அவதானிப்பை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

இது இவ்வாறிருக்க, கடந்த மார்ச் ஏப்பிரலில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானம் செயற்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றி எந்தவொரு பரிந்துரைகளையும் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தவேயில்லை.

அதேவேளை, கண்காணிப்பு, நீதித்துறைச் சீரழிவு, துன்புறுத்தல், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சுறுத்தலுக்குள்ளாவது என்ற வழமையான சிக்கல் தொடர்ந்தும் நீடிக்கும் நிலைக்கு அப்பால், அது தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் மாணவர்கள், கல்விமான்கள், மதத்தலைவர்களை நோக்கியும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் செயற்படும் சிவில் அமைப்புகளைக் கட்டுப்படுத்த புதிய விதிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த விதிகள் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமடையச் செய்யும் அச்சம் நிலவுகிறது என்பதை அவதானிக்கும் ஆணையாளர், வடக்கு கிழக்கில் தமிழர் தரப்புகள் வெளியிட்டுவரும் அச்சங்களையும் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் தான் குறிப்பெடுத்துக் கொள்வதாகக் கூடச் சொல்லத் தவறிவிடுகிறார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்

ஆனால், அரசாங்கம் சிவில் அமைப்புகளைக் கட்டுப்படுத்த முயலும் அந்தப் புதிய விதிகள் பற்றிய வரைபை வெளிப்படுத்தி அது பற்றிப் பகிரங்கமாகப் பேச விவாதம் உருவாக இடமளிக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் வழக்கின் பிரதான எதிரியான வசந்த கோதாகொட விடுதலை செய்யப்பட்டமை, மற்றும் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் நேரடித் தலையீடு தொடர்பான தனது கவலையை ஆணையாளர் வெளிப்படுத்துகிறார்.

மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக ஆறாவது அலுவலகமாகக் கிளிநொச்சியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றியும் ஆணையாளர் பாராட்டுகிறார். அதேவேளை, இந்த அலுவலகப் பொறிமுறை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமெனவும் சொல்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் அதேவேளை அவர்களுக்கு நீதியையும் அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும் எனவும் கூறுகிறார். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடான சட்டமூல உருவாக்கத்தின் அவசியம் பற்றியும் கூறுகிறார். அதேவேளை, ஜனாதிபதி நியமித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவருமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

அதாவது, நேரடியாக இல்லாது விடினும், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறையை ஆணையாளர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றே நாம் இதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

அதேவேளை, ஏற்கனவே ஐ.நா. வின் வேறுபட்ட இடங்களில் இருந்த ஆயிரத்து நூற்றி இருபத்தியொரு ஆதாரங்களை ஓரிடத்தில் ஒன்றுபடுத்தியிருப்பதாகவும் மேலும் புதிய ஆதாரங்களை இந்தவருடம், அதாவது இனிமேற்தான் 46/1 தீர்மானத்துக்கு உட்பட்டு, தேடவிருப்பதாகவும் ஆணையாளர் கூறுகிறார். இந்தச் செயற்பாடுகளுக்குரிய நிதிகளையும் உறுப்பு நாடுகளிடம் ஆணையாளர் கோருகின்றார்.

ஆக, இலங்கை அரசு மீது ஜெனீவா கடந்தமுறை கொடுத்த அழுத்தத்துக்கு கணிசமாக அது உட்பட்டு இணங்கிவந்திருப்பதாகவும், அது உள்ளகப் பொறிமுறையை மேலும் சீரமைத்து, தானே ஒத்துக்கொண்டுள்ள விடயங்களைச் செய்தாற்போதும் என்பது போலவும் ஆணையாளரின் அணுகுமுறை அமைந்துள்ளது.

அதாவது இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் ஆட்சி முறைக்காகவே தமிழ் இன அழிப்பு இடம்பெற்றது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறிக் கொண்டு மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய வல்லாதிக்க நாடுகள், இலங்கை ஒற்றையாட்சியை நல்வழிப்படுத்தும் பொறிமுறைகளையே தமது பரிந்துரைகளில் முன்மொழிந்து வருகின்றன. அதனையே ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையும் எடுத்தியம்புகின்றது.

இனி, அவரின் மொழியிலேயே, அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துப்பாருங்கள்:

Check against delivery
48th session of the Human Rights Council
Oral Update on the human rights situation in Sri Lanka
Statement by Michelle Bachelet, UN High Commissioner for Human Rights
Geneva, 13 September 2021

Distinguished President,
Excellencies,

I am pleased to update the Human Rights Council on Sri Lanka and the trends and issues identified in my last report. I acknowledge the inputs sent by the Government in preparation for this update, and I note the President's statement in June that the Government is “committed to work with the UN to ensure accountability” and will implement "necessary institutional reforms.” I look forward to seeing concrete actions to this effect, in line with the recommendations that have been made in our reports and by various human rights mechanisms, and my Office stands ready to engage.

I also encourage the swift and public release of the reports of the national Commission of Inquiry that was appointed in January 2021, which I understand will complete its mandate by the end of this year, so that its work and recommendations can be assessed.

The current social, economic and governance challenges faced by Sri Lanka indicate the corrosive impact that militarisation and the lack of accountability continue to have on fundamental rights, civic space, democratic institutions, social cohesion and sustainable development.

A new state of emergency was declared in Sri Lanka on 30 August, with the stated aim of ensuring food security and price controls, amid deepening recession. The emergency regulations are very broad and may further expand the role of the military in civilian functions. The Office will be closely monitoring their application.

I note with interest the President’s recent meeting with some civil society leaders, and I encourage broader dialogue and steps to open Sri Lanka’s civic space. Regrettably, surveillance, intimidation and judicial harassment of human rights defenders, journalists and families of the disappeared has not only continued, but has broadened to a wider spectrum of students, academics, medical professionals and religious leaders critical of government policies. Several peaceful protests and commemorations have been met with excessive use of force and the arrest or detention of demonstrators in quarantine centres.

New regulations on civil society groups are being drafted, and it is widely feared that they will further tighten restrictions on fundamental freedoms. I urge that the draft be made public to allow the broadest possible discussion.

I am concerned by developments in judicial proceedings in a number of emblematic human rights cases. They include the Attorney General’s decision not to proceed with charges against former Navy commander Wasantha Karannagoda in the case of the enforced disappearances of 11 men in 2008 and 2009. Despite various inquiries, the victims of the Easter Sunday bombings in 2019 and religious leaders continue to call urgently for truth and justice and a full account of the circumstances that permitted those attacks.

The President’s recent pardon of a former member of parliament, Duminda Silva, who was convicted for killing a politician in 2011, also risks eroding confidence in the rule of law and judicial process.

I am deeply concerned about further deaths in police custody and in the context of police encounters with alleged drug criminal gangs, as well as continuing reports of torture and ill-treatment by law enforcement officials.

In March, new “de-radicalization” regulations were issued that permit arbitrary administrative detention of individuals for up to two years without trial. I note that the Supreme Court has issued an interim stay order on their enforcement while it considers fundamental rights petitions to challenge the decree. The Government has also prescribed or listed over 300 Tamil and Muslim groups and individuals for alleged links to terrorist groups.

In June, 16 prisoners who had been convicted under the problematic Prevention of Terrorism Act, and who were nearing the end of their sentences, were pardoned. An Advisory Board has been established to which detainees under the Act can apply for their cases to be reviewed, and I urge a speedy resolution to these long-standing cases.

The Government has reaffirmed its intention to revisit the Act and established a Cabinet sub-committee for this purpose, however I am deeply concerned about the continued use of the Act to arrest and detain people. Lawyer Hejaaz Hizbullah has now been detained for 16 months under the Act without credible evidence presented before a court. Likewise, Ahnaf Jazeem, a teacher and poet, has been detained without charge since May 2020. I urge an immediate moratorium on the use of the Act, and a clear timeline be set for its comprehensive review or repeal.

A National Policy for Reparations was approved in August, and reparation payments and reconciliation programs have continued. The Office of Missing Persons has also continued to operate – with a sixth regional office opened in Kilinochchi – but it needs to inspire confidence among victims. I stress again the importance of transparent, victim-centred and gender sensitive approaches, and that reparations programs must be accompanied by broader truth and justice measures.

I note also that last month, the Global Alliance of National Human Rights Institutions decided to initiate a special review of the national Human Rights Commission to determine its compliance with the Paris Principles, indicating its concerns about the appointment process of the Commission and its effectiveness in discharging its human rights mandate.

Against this backdrop, my Office’s work to implement the accountability-related aspects of Resolution 46/1 has begun, pending recruitment of a start-up team. We have developed an information and evidence repository with nearly 120,000 individual items already held by the UN, and we will initiate as much information-gathering as possible this year. I urge Member States to ensure the budget process provides the necessary support so that my Office can fully implement this work.

I encourage Council members to continue paying close attention to developments in Sri Lanka, and to seek credible progress in advancing reconciliation, accountability and human rights.

Thank you