ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு-

மாநில அரசுகளுக்குரிய நிர்வாக அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்த தமிழக ஆளுநர் - வெளிப்படுத்திய பேரறிவாளனின் விடுதலை

டில்லியின் அரசியல் தேவைக்காகச் சட்ட அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்யும் மாநில ஆளுநர்கள்
பதிப்பு: 2022 மே 19 09:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 19 12:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பேரறிவாளன் முப்பத்தியொரு ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடுதலையின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் சட்ட அதிகாரத்தை புதுடில்லி ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக மாநில ஆளுநர் ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ் நாட்டு மாநில அரசுக்கே உண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதோடு, தமிழ்நாட்டு ஆளுநரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
 
ஈழத்தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் சர்வதேசத்தில் நிறுவப்பட்டுவிடக்கூடாது என்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடிப்படைவாத விருப்பங்களின் பிரகாரமே, இந்திய மத்திய அரசும் செயற்பட்டது என்பது பகிரங்கமானதொன்று

இந்திய மாநிலங்களுக்கு அரசியல் ரீதியான உரிய அதிகாரங்கள்கூட இல்லாதவொரு நிலையிலும், நிர்வாக அதிகாரங்களையும் மத்திய அரசு ஆளுநர்கள் ஊடகத் தம்வசப்படுத்தியிருக்கின்றது என்பதையும் உச்ச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.

ஆனாலும் இதே உச்ச நீதிமன்றம்தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழுபேரின் விடுதலையைப் பல வருடங்களாகச் சட்ட ஏற்பாடுகளுக்கு மாறாக அரசியல் நோக்கில் காலதாமதம் செய்தது என்ற குற்றச்சாட்டுக்களும் இல்லாமில்லை.

இருந்தாலும், அந்த ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாட்டு மாநில அரசு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அந்தத் தீர்மானத்தை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி இராமமூர்த்தி, தமிழ்நாட்டு ஆளுநருக்கு அனுப்பியிருந்தார்.

ஆனால், தமிழ்நாட்டு அரசின் அந்தத் தீர்மானத்தை ஆளுநர் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தினார். அத்துடன் இரண்டரை ஆண்டுகள் கழித்துத் தமிழக அரசின் அந்தத் தீர்மானத்தை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

இதனால் பேரறிவாளனின் தாயார், புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம். தமிழக ஆளுநரின் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து விமர்சித்தது.

அத்துடன் ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியமை, இந்திய அரசியல் யாப்பின் பிரகாரம் செல்லுபடியற்றது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் விடுதலை தொடர்பான மாநில அரசுக்குரிய நிர்வாக அதிகாரத்தின் மூலமான தீர்மானம் ஒன்றை, அந்த மாநில ஆளுநரே பரிசீலித்து முடிவை அறிக்க வேண்டும். மாறாக அத் தீா்மானத்தை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய தேவையே இல்லை.

மத்திய – மாநிய அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பட்டியலில், மாநில அரசு ஒன்றின் தீா்மானத்தை அந்த மாநில ஆளுநர் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எந்தவொரு ஏற்பாடும் இல்லையென்பது உச்ச நீதிமன்றத்தின் பொருள்கோடலாகும்.

பேரறிவாளனின் தாயார் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகிய மூவரும் இந்தத் தீர்ப்பை பகிரங்கமாக அறிவித்துள்ளதோடு, மத்திய - மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரங்கள் பற்றிய விளக்கங்களையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மாநில அமைச்சரவையின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டே, மாநில ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலம் சிறைத்தண்டனை பெற்றுவரும் கைதி ஒருவரை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை தீர்மானம் எடுத்து அதனை பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பிய பின்னர், 161வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

தீர்ப்பின் மூலம் மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களை ஆளுநர்கள் டில்லியில் உள்ள ஆட்சியாளர்களின் அரசியல் தேவை மற்றும் கட்சி அரசியல் செயற்பாடுகளின் அடிப்படையில் அதிகாரத் துஸ்பிரயோகம் செய்வதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்

அப்படித் தனக்குரிய அதிகாரத்தைச் செயற்படுத்தாமல் இருப்பது அல்லது தாமதத்தை ஏற்படுத்தினால், அது பற்றிப் பாதிக்கப்பட்ட தரப்பு உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர முடியுமெனவும் நீதியரசர்கள் தமது தீர்ப்பில் விபரித்துள்ளனர்.

மாநில அரசின் தீர்மானம் ஒன்றை ஆளுநர் புறக்கணிக்க முடியாது. அது இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை மீறுவதாகவே அமையும் என்றும் அரசியல் யாப்புக்கு அது விரோதமானது எனவும் நீதியரசர்கள் தமது தீர்ப்பின் முடிவுரையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதேபோன்ற மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய தண்டனை சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்புச் சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருப்பது தவறானது என்றும் கண்டித்துள்ள நீதியரசர்கள், அரசமைப்புச் சட்டமோ, இந்திய தண்டனைச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேறு சட்டங்களோ அப்படித் தண்டனை குறைக்கும் வெளிப்படையான நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், 302ன் கீழ் மாநில அரசுக்கே அந்த நிர்வாக அதிகாரங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் நீதியரசர்கள் தமது தீர்ப்பில் விரைவிலக்கணம் செய்துள்ளனர்.

பேரறிவாளனின் நீண்ட கால சிறைத் தண்டனை, அவருடைய உடல் நலம், சிறைச்சாலையில் இருந்தபோது அவர் பெற்ற கல்வித் தகமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்புவது பொருத்தமற்றது என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதியரசர்கள், உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142 பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் இத் தீர்ப்பை வழங்குவதாகவும் நீதியரசர்கள் கூட்டாக அறிவித்தனர்.

1991 ஆண்டு பேரறிவாளன் குறித்துப் பதிவான குற்ற எண் 329 இன் கீழ் தண்டனையை அனுபவித்துள்ளாதாகக் கருதி இத் தீர்ப்பை வழங்குவதாகவும் நீதியரசர்கள் தமது அறிவிப்பை வெளியிட்டனர்.

மாநில அரசின் தீர்மானம் ஒன்றை ஆளுநர் புறக்கணிக்க முடியாது. அது இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை மீறுவதாகவே அமையும் என்றும் அரசியல் யாப்புக்கு அது விரோதமானது எனவும் நீதியரசர்கள் தமது தீர்ப்பின் முடிவுரையில் தெளிவுபடுத்தியுள்ளனர்

இத் தீர்ப்பின் மூலம் மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களை ஆளுநர்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்களின் அரசியல் தேவை மற்றும் கட்சி அரசியல் செயற்பாடுகளின் அடிப்படையில் அதிகாரத் துஸ்பிரயோகம் செய்வதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இந்திய சமஸ்டி முறை ஆட்சி உள்ள நாடு என்று கூறினாலும், இந்தியாவின் எழுதப்பட்ட நெகிழ்ச்சியடையாத அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றே அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். மாநிலங்களுக்குரிய ஆளுநர்களை மத்திய அரசே நியமிக்கின்றது. அதனால் ஆளுநர்கள், புதுடில்லியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாகவே செயற்படுகின்றனர் என்பது கண்கூடு.

அந்த ஒற்றையாட்சித் தன்மை கொண்ட அரைகுறை சமஸ்டி முறையில் இருக்கும் அற்பசொற்ப அதிகாரங்களையும் அரசியல் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகள், உயர்மட்ட இராஜதந்திரிகள் கையாளுகின்றனர் என்பது ஏற்கனவே தெரிந்தவொரு நிலையில், பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்தக் கருத்தை மேலும் நியாயப்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் சர்வதேச மட்டத்தில் நிறுவப்பட்டுவிடக்கூடாது என்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடிப்படைவாத விருப்பங்களின் பிரகாரமே இந்திய மத்திய அரசும் செயற்பட்டது என்பது பகிரங்கமானதொன்று

அத்துடன் இந்திய மாநிலங்களை ஒத்த அதிகாரப்பரவாலாக்கல் மூலமான அரசியல் தீா்வு ஒன்றையே, ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டுமென்ற அடிப்படை நோக்கம் இந்தியாவுக்கு இருந்தது என்பதையும் 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் சமாதான முயற்சிகளின்போதும் அறியக்கூடியதமாக இருந்தது.