நிரல்
ஒக். 19 13:06

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமே செய்யப்படவில்லை என்று அரசாங்கம் மறுக்கும் நிலையிலும் நிதியுதவி செய்ய முடிவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வை முன்வைக்கக்கூடிய ஏற்பாடுகள், தொடர்பாகத் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதாக ஐ.எம்.எப்.எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடன் மறு சீரமைப்புத் தொடர்பாக சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாகப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்த நிலையில் இலங்கைத்தீவுப் பொருளாதாரத்தை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் எதிர் கொண்டுவரும் சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அரசாங்கத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஒக். 18 08:24

கொழும்பில் மாணவா்கள் போராட்டம்- பொலிஸார் பொதுமக்கள் வாய்த்தர்க்கம்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை பொலிஸார் மாணவர்களுக்கு வழங்கியபோதும், மாணவர்கள் அதனை எற்றுக்கொள்ளவில்லை.
ஒக். 17 10:38

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பு ஐ.நா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறிப்பாக இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சரணடைந்து காணாமல் போனவர்களின் உறவினர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமெனவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டக்கார்கள் கோசம் எழுப்பினர். சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே தமக்கு நீதி வழங்கமாட்டார்கள் என்றும், இலங்கை நீதித்துறையில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் உறவினர்கள் கோசம் எழுப்பினர்.
ஒக். 16 10:35

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஒன்றாக எழுவோம் என்ற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். பெருமளவான பொதுமக்கள் நாவலப்பிட்டியில் ஒன்றுகூடி பதவியில் துரத்தப்பட்ட மக்கிந்த ராஜபக்சவுக்கு மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தகுதியில்லை என மக்கள் குற்றம் சுமத்திக் கோசம் எழுப்பினர்.
ஒக். 15 15:16

உக்ரெய்ன் - ரசியப் போர் மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்களில் இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

ரசிய - உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கத் தீர்மானித்திருந்தது. இதன் பின்னரான சூழலிலேயே இந்தியாவுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரெய்ன் விவகாரம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரசியா - உக்ரெய்ன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட மறுத்துவிட்டார்.
ஒக். 14 10:11

கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் பொலிஸ் பதிவு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் வாழும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தங்கள் விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிய வேண்டுமென விடுக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்பிட்டி பிரதேசங்களில் பொலிஸார் பாதுகாப்பு அமைச்சின் படிவங்களை கடந்த இரண்டு நாட்களாக விநியோகித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.
ஒக். 13 10:02

மார்ச் மாதத்துக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

(வவுனியா, ஈழம்) அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை ஏற்க முடியாதெனவும், தேர்தல் ஒத்திவைக்கப்படும் முடிவை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பதாகவும் கூறிய ஆணைக்குழுவின் தலைவர், செப்டம்பர் மாதத்திற்கு பின்னர், தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
ஒக். 12 21:44

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை முழுமையாகச் சுவீகரிக்குமாறு உத்தரவு

(வவுனியா, ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் அபகரித்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை முழுமையாகச் சுவீகரித்துப் படையினரின் தேவைகளுக்குப் பயன்படுத்துமாறு கொழும்பில் உள்ள காணி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரேனுகா, தெல்லிப்பளைப் பிரதேசச் செயலாளருக்குச் சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போது வரை இரண்டாயிரத்து 467 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ளது. இதில் இராணுவத்துக்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு அன்று தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒக். 11 23:07

எரிக்சொல்கேய்ம் கொழும்பில்- சந்தேகமான கேள்விகளைத் தொடுத்த சிங்களச் செய்தியாளர்கள்

(வவுனியா, ஈழம்) நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்கெய்ம் கொழும்புக்கு வந்துள்ளமை தொடர்பாகச் சிங்கள செய்தியாளர்கள் சந்தேகமாக கேள்விகளை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் முன்வைத்தனர். புலம்பெயர் தமிழர்களின் நோக்கங்களை நிறைவேற்றவா எரிக்சொல்கேஸ்ம் நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் கொழும்புக்கு வருகை தந்துளார் என்று கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, இலங்கைக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்து செல்கின்றமை தொடர்பாக எவரும் அச்சமடையத் தேவையில்லையெனக் கூறினார்.
ஒக். 10 22:58

அடக்கு முறைக்கு எதிராக காலிமுகத்திடலில் இரண்டாவது நாளாகவும் போராட்டம்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கொழும்பு காலிமுகத்திடல் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலிமுகத் திடலில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தைக் கலகமடக்கும் பொலிஸார் பலாத்காரமாக அடக்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டத்தரணிகள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். மக்களின் உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.