செய்தி: நிரல்
பெப். 05 10:38

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தேரர்கள் முயற்சி- ஆதரவைத் தேடும் பணி ஆரம்பம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தானே நியமிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்ச குடும்பத்தை ஆதரிக்கும் உறுப்பினர்கள் விசனமடைந்துள்ளனர். அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ள உறுப்பினர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் கோட்டாபய ராஜபக்சவின் எலிய என்ற அமைப்புக்கு சார்பாக செயற்படும் பௌத்த தேரர்கள் சமரச முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பெப். 04 19:48

பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனித்ததை அடுத்து தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் ஆதரவுடன் இலங்கையின் 71 ஆவது சுதந்திர நாள் கொழும்பில் சிங்கள அரச தலைவர்களால் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்குகில் கரிநாள் அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பிரித்தானியா தலைநகர் இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்புடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
பெப். 04 15:34

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் கறுப்புக்கொடிகள் பறந்தன; கிளிநொச்சியில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கட்கிழமை முற்பகல் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அனைத்து தமிழ் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கமும் அவ்வாறு கூறியிருந்தது. இலங்கைப் படையினர் அபகரித்துள்ள காணிகளை மீட்பதற்காகப் போராடி வரும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களும் கரிநாளாகவே அனுசரித்தனர்.
பெப். 03 15:14

இலங்கையின் அழைப்பை ஏற்று ஐ.நா நிபுணர் விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் கொழும்புக்கு வருகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார். பாலியல் நோக்கு நிலை, பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள், பாகுபாடுகளுக்கு எதிரான முறைப்பாடுகளை ஆராய்வு செய்யும் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் என்பவரே இலங்கைக்கு வரவுள்ளார். போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மை நிலைமைகளைக் கண்டறிய கொழும்புக்குப் பயணம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்களை இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்து வருகின்றனர்.
பெப். 02 22:24

போதைப்பொருள் விநியோகம்; தாக்குதலுக்கு இலக்கான மாணவனுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் குறிப்பாக தமிழர் தாயகமாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெப். 02 20:57

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுட்டிக்கப்போவதாக கேப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்பு போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தமது புர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடரட போராட்டம் மேற்கொண்டுவரும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுட்டிக்கவுள்ளதாகவும் பாரிய கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
பெப். 02 15:42

தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்கள்- ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியை ஏற்பார்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சியில், ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்தமை தொடர்பாக மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய பொது ஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விமர்சித்துள்ளது. ஆனாலும் கட்சியின் பத்து உறுப்பினர்கள் ரணில் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியதென்பதால் வேறு கட்சிகளையும் அரசாங்கத்தில் இணைக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படுவதாக மகிந்த ராஜபக்ச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குற்றம் சுமத்தயுள்ளார்.
பெப். 01 20:06

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சுதந்திர தினத்திலாவது விடுவிக்க வேண்டும்

(மன்னார், ஈழம்) தமிழ் அரசியல் கைதிகள் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கைச் சிறைச்சாலைகளில் வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமையையும் வேண்டுகோளையும் மதித்து இலங்கையின் சுதந்திர தினத்தன்றாவது அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழு இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசியல் கைதிகள் விவகாரம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பல நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில் மன்னார் பிரஜைகள் குழு இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப். 01 19:25

நாவாந்துறையில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

(மன்னார், ஈழம்) யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் வைத்து மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்காததனால் அவரைப் பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை தமக்கு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரைப் பொதுமக்கள் தாக்கியிருந்ததால் வைத்தியசாலையில் சேர்ப்பித்து சிகிச்சை வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்ததாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
பெப். 01 19:11

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியாவில் மூவர் கைது

(வவுனியா, ஈழம்) இன அழிப்பு போரின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக கடந்த 10 வருடங்களாக தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களின் ஊடாக தகவல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. இவ்வாறான நிலையில் வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளதாக வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.