கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
டிச. 17 19:04

இமாலயப் பிரகடனம் - பின்னணியும் வரலாறும்

(வவுனியா, ஈழம்) அதிகளவு சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை ஒற்றை ஆட்சி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் தேசியச் சிக்கலுக்குரிய தீர்வை முன்வைக்க முடியாது என்பதாலேயே 'ஈழத்தமிழர் தேசியம்' என்ற கோட்பாடு எழுந்தது. சிங்களவர் ஈழத்தமிழர் ஆகிய இரு அரசியல் சமூகங்களும் தேசங்களாக ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டாக நின்று நிர்வாக அதிகாரத்தை அல்ல ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவதன் மூலமே இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும். இதற்கான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாகச் செயற்பட்டு ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கி வருவதால் மிகவும் பலவீனமான நிலைமை அதலபாதாளமாக வெளித் தோற்றத்துக்குத் தெரிகிறது.
நவ. 16 08:07

தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

(மட்டக்களப்பு, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது இருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் பதின்மூன்றை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் சிங்கள ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பதே உண்மை.
நவ. 12 01:10

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

(வவுனியா, ஈழம்) இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்து ராஜீவ் காந்தி பதவியிழந்த பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பி.வி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் 1989 செப்ரெம்பர் மாதம் இருபதாம் திகதியன்று இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் இருபத்தோராம் திகதி மனித உரிமைச் செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழக உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ராஜினி திராணகம (Rajani Thiranagama) இனம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டார். ரஜினி திரணகம ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டுப் பின்னர் விலகியிருந்தார்.
செப். 09 23:03

போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடந்திருக்காது

(வவுனியா, ஈழம்) 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யாராக இருக்கும் என்பது தொடர்பான சந்தேகங்கள், ஊகங்கள், தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே எல்லோர் மனதிலும் அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப எழுந்தன. இப் பின்புலத்தில் சனல் 4 தொலைக்காட்சி முழு விபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று பலர் மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்தன. ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் குற்றச்சாட்டு விபரங்கள் உண்டு.
ஜூன் 24 17:46

புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையற்ற தலைமைப் பதவி

(மட்டக்களப்பு, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஒரு "தேசிய இயக்கம்" போன்ற அமைப்பையே எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் கடந்த பதினான்கு வருடம் சென்ற பின்னரும்கூட அது சாத்தியமாகவில்லை. தேர்தல் வியூகங்களுடன் கட்சி அரசியல் மாத்திரமே வளர்ந்து வருகின்றன. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்த்தேசிய அரசியல் இயங்கு நிலைக்குத் 'தேசிய இயக்கம்' அவசியம் என்றும் அந்தத் தேசிய இயக்கமே இலங்கை அரசாங்கத்துடனும் கொழும்புக்கு வந்து செல்கின்ற சர்வதேச அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும் எனவும் மக்கள் விரும்பியிருந்தனர்.