சர்வதேச தினத்தில்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பேரணி- சர்வதேச விசாரனை அவசியம் என வலியுறுத்தல்

இலங்கை ஜனாதிபதி மீதும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 30 15:18
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:08
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர்க் காலங்களில் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இறுதிப் போரின்போது இலங்கைப் படையினரிடம் சரணடைந்தும் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரனை அவசியம் என வலியுறுத்தி மன்னார் நகரில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட் தந்தையர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்குபற்றினர்.
 
இன்று முற்பகல் 10.30க்கு ஆரம்பமான மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் அரச செயலகத்தைச் சென்றடைந்தது.

அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் மகஜர் ஒன்றை பெற்றுக் கொண்டானர்.

காணாமல் ஆக்கப்பட்டு ஆண்டுகள் பல சென்ற பின்னரும் கூட நல்லாட்சி என்று கூறிக் கொண்டு இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளது என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் அமைதியாக இருக்கின்றார்? பதில் சொல்லுங்கள் என்று எழுதப்பட்ட வாசகங்களையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே?, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே? ஏன்று உறவினர்கள் கேள்வி தொடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தையர்களான பிரான்சிஸ் ஜோசப், நிகால் ஜிம்பிறவுண் ஆகிய இருவரது படங்களையும் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் பங்குபற்றினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி சரியான பதிவுகள் இல்லாதபோதும் சுமார் 30 ஆயிரம் பேர்வரை வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் மற்றும் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் சங்கம் கூறுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடத்தது என்பதை வலியுறுத்தி கடந்த மாதம் கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது.

காணாம்ல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதே தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.