நிரல்
பெப். 25 13:02

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முடங்கியது வடக்கு - தாயக மக்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவந்த தொடர் போராட்டம் இரண்டு வருடத்தை நிறைவு செய்துள்ள போதும் எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பாரிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெப். 24 21:16

வடக்கு மாகாணத்தை முடக்கி நாளை பூரண கதவடைப்பு - ஐ.நா அமர்வை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்றனவற்றுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் பெறும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பெப். 24 20:29

அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிளிநொச்சி - முழங்காவில் பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெப். 24 10:20

பயங்கரவாத திருத்தச்சட்டமும் வேண்டாம் பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் - மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம் என வலியுறுத்தியும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் தழுவிய எதிர்ப்புப் போராட்டம் கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன்னால் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெப். 21 16:34

வரவு செலவுத் திட்டம் நிதிநெருக்கடிக்கு மத்தியில் தயாரிப்பு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு- அமைச்சர் மங்கள

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி எற்பட்டுள்ள நிலையிலும் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் அபிவிருத்தி செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை சர்வதேச நாணய நியதியம் நிறுத்தியுள்ளது. ஆனாலும் மீண்டும் அந்த உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நியதியத்தின் பிரதிநிதிகள் தற்போது கொழும்புக்கு வந்துள்ளனர் என்றும் அவர்கள் இலங்கை மத்திய வங்கி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
பெப். 20 14:40

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்துவிட்டதாக பெருமிதம் வெளியிட்ட போதும் தொடர்ந்தும் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதற்கான காரணம் என்ன எனவும் அதனை நீக்குமாறும் வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெப். 20 14:17

பாடசாலை மாணவன் மீது அதிபர் தாக்குதல் - அதிபருக்கு எதிராக தாக்கல் செய்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு அச்சுறுத்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) பாடசாலை மாணவன் ஒருவன் மீது அதே பாடசாலை அதிபர் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவித்து தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறு குறித்த மாணவனுக்கு வலயக் கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவ்வாறு மீளப்பெற்றால் மாத்திரமே உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பெப். 20 12:57

யாழ் கொக்குவில் பிரதேசத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்- பொலிஸ் அதிகாரியை கைது செய்ய ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேச கருவப்புலம் வீதியில் வைத்து இலங்கைப் பொலிஸாரால் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று புதன்கிழமை நண்பகல் பெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொளிப் பதிவில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் நடராஜா குகராஜ் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெப். 19 15:46

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்- வாகனங்கள் எரிந்து நாசம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணத்தில் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எதுவுமே எடுப்பதில்லையென பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரிடம் முறையிட்டுள்ள நிலையிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வன்முறைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. யாழ். கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியை சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் இலங்கைப் பொலிஸாரினால் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பெப். 18 13:46

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் - ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், 40 ஆவது ஐ.நா அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றுகூடி கிளிநொச்சியில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.