கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
நவ. 30 09:20

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்- வெளிப்படுத்தப்பட்ட கூட்டுரிமையும் மறைக்கப்பட்ட அடையாளங்களும்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுத் தமது கூட்டுரிமையை வலியுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிவப்பு- மஞ்சள் நிறக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற மாவீரர் நாளுக்குரிய அடையாளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. சட்டப் பாதுகாப்போடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில பிரதிநிதிகள் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து முடித்திருக்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.
நவ. 28 09:12

குறைகூற விரும்பாத அமெரிக்க- இந்திய அரசுகள்

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழர் விவகாரத்தை அமெரிக்க இந்திய அரசுகள் எப்படி கையாளுகின்றன என்பது பற்றிய விளக்கங்கள், அதனை மாற்றியமைக்க வேண்டிய வழிமுறைகள், இப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரையும் ஒரே குரலில் பேசுவதற்கான புள்ளியில் வருவதாக இல்லை. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு குரலில் பேசுகின்றனர். முன்னைய ஆட்சியாளர்கள் அணுகிய இராஜதந்திரத்தைப் புதிய ஆட்சியாளர்கள் தொடரும் பண்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இருந்து வருகின்றது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
நவ. 23 00:54

புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தத் தவறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

(கிளிநொச்சி, ஈழம்) இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயற்திட்டங்களில் அமெரிக்க- இந்திய அரசுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன. இந்த வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கின்றது என்பது பற்றியெல்லாம் எமது கூர்மை செய்தி இணையத்தளத்தில் பல செய்திக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி அரசாங்கத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற பின்னரான சூழலிலும் பூகோள மற்றும் புவிசார் அரசியல் நிலமைகள் தொடர்பாக கூர்மைத் தளத்தில் செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பசில் ராஜபக்ச அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த யூன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
நவ. 20 23:08

இந்தோ- பசுபிக் விவகாரமும் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முற்படும் அமெரிக்க இந்திய மற்றும் சீன அரசுகள், இலங்கைக்கு அதிகளவு நிதியுதவிகளை ஏட்டிக்குப் போட்டியாக வழங்கி வருகின்றன என்பதை கொழும்பில் உள்ள இந்த நாடுகளின் தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டாலும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வல்லாதிக்க நாடுகள் நம்புவதுபோல் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்று காண்பிக்கப்பட்டாலும், வடக்குக் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களின் இனப்பரம்பலைக் குறைக்கும் நோக்கிலேயே இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிதியைக் கையாளுகின்றது.
நவ. 02 15:48

அமெரிக்க இந்திய நலன்களுக்கு ஏற்ப 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு கோரி தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய இலங்கை அரசுகளிடம் கோரவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டம் முடிவடைந்ததும் கூர்மைச் செய்தித் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.