கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
செப். 15 22:56

அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி

(மன்னார், ஈழம்) வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செப். 08 21:05

ஈழத்தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட புலவர் புலமைப் பித்தன் இயற்கை எய்தினார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த தமிழ்நாட்டுப் புலவர் புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய புலமைப்பித்தன், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஈழத்தமிழ்ப் போராளிகளைக் காப்பாற்ற வேண்டுமென விரும்பியிருந்தாலும், தமிழ் ஈழம் அமைய வேண்டுமென்பதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதைப் புலமைப் பித்தன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
செப். 07 21:45

மங்கள சமரவீர பாணியில் பீரிஸ்: ஐ.நா. அணுகுமுறை புதிய வடிவில் முன்னெடுப்பு

(மன்னார், ஈழம்) பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையிடலின் பதின்மூன்று பக்கச் சுருக்கத்தை கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது. உள்நாட்டுப் பொறிமுறைகள் மிகவும் சீராக இயங்குவதான தோற்றப்பாட்டைக் கொடுக்கும் வகையில் 14 தலைப்புகளில் 25 புள்ளிகளில் கனகச்சிதமாக அவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதைப் பார்த்து வியந்து போயிருப்பதாகப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் தகவலறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 27 10:32

இந்தியா தொடர்பாக தப்புக்கணக்குகள் போடும் தமிழக, ஈழ, புலம்பெயர் தமிழர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சார்க் (SAARC) நாடுகளின் பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பை மாத்திரம் இயக்குவதற்கு இந்தியா அண்மைய வருடங்களில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனும் இந்தோ பசுபிக் இராணுவ வியூகத்தில் இணைந்திருக்கும் இந்தியா, ஏப்ரல் இறுதியில் Supply Chain Resilience Initiative (SCRI) என்ற அமைப்பை QUAD உறுப்பு நாடுகளான ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் உருவாக்கியது. பதிலடியாக இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) சீனா ஜூலை மாதம் உருவாக்கியது.
ஜூலை 25 22:55

இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் கொள்கைளில் பாரிய சரிவு என்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொறின்பொலிஸி (Foreign policy)என்ற கொள்கை இணையத்தளம் கூறுகின்றது.