கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
டிச. 28 07:16

அமெரிக்க - இந்திய இராஜதந்திர நகர்வுகளை அவதானிக்கும் அநுர

(வவுனியா, ஈழம்) அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அமைவதற்கு முன்னராகவே அமெரிக்க - இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தனிக் கவனம் இலங்கை மீது அதிகரித்திருந்தது. அநுர ஜனாதிபதியான பின்னரும் இந்த நாடுகளின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அநுர ஆட்சிக்குப் புதியவர் என்ற கோணத்தில் சில பரிந்துரைகளை இந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்க இந்திய அரசுகள் வழங்கியிருந்தன. குறிப்பாக மீள் நல்லிணக்கம் என்பதும் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் போன்ற சர்வதேசச் சொல்லாடல்களுக்கு உரிய பரிந்துரைகள், அநுர அரசாங்கத்தக்கு வழங்கப்பட்டிருந்தன.
டிச. 22 10:19

ஸ்ராலினுக்கு நோகாமல் பேசிய கஜேந்திரகுமார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை.
ஜூன் 07 21:15

திம்புக் கோட்பாட்டை முதன்மைப்படுத்துவாரா கஜேந்திரகுமார்? சுரேஸ் - சித்தார்த்தன் - செல்வம், நிலைப்பாடு என்ன?

(முல்லைத்தீவு, ஈழம்) அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜன. 07 08:02

தமிழ்த் தேசியப் பரப்பின் கவனத்தை ஈர்த்துள்ள பேராசிரியர் ரகுராமின் உரை

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றங்களுக்கும் ஏமாற்றங்களுக்குமிடையே நம்பிக்கை தரும் ஓர் உரையாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஞாயிறன்று ஆற்றிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வில் இம்முறை மக்கள் முன்னணி முன்வைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் திட்டத்தில் உள்ள குறைபாட்டையும் சுட்டிக்காட்டிய ரகுராமின் உரை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய நன்றியுரையில் அவற்றை வரவேற்றும் உள்ளார். இந்த வரவேற்பு உண்மையான சுயவிமர்சனங்களுக்கு இடங்கொடுக்கும் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜன. 04 20:57

பத்து ஆண்டுகளின் பின் மீண்டும் ஈழத்தமிழர் தரப்பை மேற்கின் ஆழ்நிலைத் தரப்புகள் குறிவைக்கின்றன

(யாழ்ப்பாணம், ஈழம்) 2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.
ஜூலை 01 13:50

கருவிலேயே தவறுகிறதா தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி? அதைக் காப்பாற்ற வழி ஏதும் உண்டா?

(முல்லைத்தீவு) ஈழத்தமிழர்களுக்கென்று தனியாக அடையாளப்படுத்தப்பட்ட மரபுவழித்தாயக உரிமையை அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளார்கள். இது ஈழத்தமிழர் தேசியத்துவத்தின் முதலாவது அச்சாணி நிலைப்பாடு. ஒரு தனித்துவமான தேசிய இனமாகத் தமது அரசியல் வேணவாவை அவர்கள் முன்வைத்துப் போராடி வந்துள்ளார்கள் என்பது இரண்டாது அச்சாணி நிலைப்பாடு. மறுக்கப்படவொண்ணாத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பது மூன்றாவது அச்சாணி அடிப்படை. இந்த மூன்று தூண்களுக்கும் அடுத்தபடியாக இரண்டு தூண்களாக மொத்தம் ஐந்து தூண்கள் அடிப்படையானவை. இந்த ஐந்து தூண்களையும் நினைவுபடுத்தி, தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி எதுவித கோப தாபங்களுக்கும் அப்பாற்பட்டு அணுகப்படவேண்டும்.
மே 29 16:20

ஈழத்தமிழரின் அரசியல் விடுதலைக் கருத்தியலும் பொது வேட்பாளரும் எவ்வாறு ஒத்திசையலாம்?

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் தன்னாட்சியுரிமையுடனான இறைமைக் கோட்பாட்டைச் சிதைத்து உள்ளக விவகாரமாக மாற்றிவிடவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் ஒரு புறமும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுடன் இரகசிய ஒப்பந்தங்களை ஒளித்து மேற்கொள்வதில் கைதேர்ந்த தமிழர்களின் தேசிய ஏமாற்றுக் கட்சிகள் மறுபுறமுமாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தெரிவில் ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் முன்வைக்கவேண்டிய கருத்தியலை குட்டிச் சுவராக்கும் சிதைப்பு நடவடிக்கைகளைத் திரைமறைவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்தச் சிதைப்பைத் தாண்டிய நிலையில் பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் வெற்றிபெறவேண்டுமானால் நடக்கவேண்டியது என்ன என்ற கேள்விக்குத் துரிதமாக தெளிவான தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.
மார்ச் 09 21:09

ஜே.வி.பியின் பாவங்களைக் கழுவ முற்படும் சக்திகள்

(முல்லைத்தீவு, ஈழம்) ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.
பெப். 19 20:27

கொழும்புச் சந்திப்பில் மறுத்த இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணததில் நடத்திய உரையாடல் எதற்காக?

(யாழ்ப்பாணம், ஈழம்) சிங்கள அரசியல் கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சந்தித்து வரும் இந்தியா, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய நலன்களை இலங்கையிடம் இருந்து பெற்று வரும் நிலையில் அல்லது அதற்கான பேரம் பேசல்களை நடத்திக் கொண்டு இலங்கைத்தீவை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே இக்கேள்விகள் பலரிடமும் உண்டு. ஆனாலும், மிகச் சமீபகாலமாக அக் கேள்விகளை நிரூபிக்கும் வகையில் இலங்கைத்தீவு மீதுதான் இந்தியாவின் சுய நல அக்கறையைக் காண முடிகின்றது.
பெப். 12 21:29

டில்லி - ஜே.வி.பி உறவு ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இந்தியாவில் தூதுவராக இருந்த மிலிந்த மொறகொட கூறிய கருத்தை இந்தியா ஏற்றுள்ளது அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியமை இதற்குச் சான்றாகவுள்ளது. தூதுவராகப் பதவியேற்பதற்கு முன்னரும் பதவியிலிருந்து விலகி கொழும்புக்கு வந்த பின்னரும் பதின்மூன்றை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் மாகாண சபைகள் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் மிலிந்த மொறொகொட கூறியிருந்தார். அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மூன்று பிரதான கருத்துக்களை ஜே.வி.பி ஏற்க வேண்டும் என வலியுறுத்திருக்கிறார்.