இலங்கையின் ஒற்றையாட்சி

அரசியல் யாப்பு உருவாக்கத்தில் சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரட்ன பிரதான பங்குதாரர்கள்- அமைச்சர் லக்ஸ்மன்

வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதி?
பதிப்பு: 2018 ஜூலை 29 14:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 29 21:42
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிவரும் நிலையில், இந்த புதிய யாப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன். ஐ்க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய இருவருமே ஈடுபடுவதாக மைத்திரி- ரணில் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்று கூறி வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதியை இந்த இருவரும் பெறுவதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமாகச் செயற்படுவதாகவும் மஹிந்த அணியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
 
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, சுமந்திரன்- ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய இருவருமே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் என கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இருவரும் செயற்படுவதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.

கொழும்பு -புஞ்சி பொரளையிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில், சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களான சுமந்திரன்- ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய இருவரும் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற ஏனையவர்களின் இணக்கம் இன்றிச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்து மேலும் பரிசீலனை செய்வதற்கு அரசியமைப்பச் சபை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திரு்ந்த நிலையில் மஹிந்த அணி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம், ஈழத்துக்கு வழி வகுக்கும் என மஹிந்த அணி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவும் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சமஸ்டி ஆட்சியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோருவதாகவும் அதனை ஏற்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் கூறியிருந்தார்.

அதேவேளை, புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அதேவேளை, ஒற்றையாட்சித் தன்மை கொண்ட புதிய யாப்பு ஈழத் தமழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது என்றும் அந்த யாப்பை நிராகரிக்க வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் இறைமையை பிரிக்­க­மு­டி­யாது என்­பதை அனை­வ­ரும் ஏற்றுள்ள நிலையில். ஒற்­றை­யாட்சி என்பது இயல்பானதாகவே அமைந்துவிடும் என்றும் ஒள்றையாட்சி என்ற பதமே அவசியமில்லை எனவும் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன, புதிய யாப்புக்கான வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.