நிரல்
ஜூலை 22 15:12

போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மனிப் பிரதேசத்தில் போர்க்கால மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிஸ்தரன் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். நேற்றுக் காலை அல்லது முற்பகல் நீதிவான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை வருகை தந்த நீதிவான் சதிஸ்தரன், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை உன்னிப்பாக அவதானித்தார். குடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்தே மனித எச்சங்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டன. இது தொடர்பாக இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை அதிகாரிகள் யாழ் நகரில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
ஜூலை 21 15:30

ஆதாரங்கள் இருந்தும் விசாரனைகளை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி? தமிழக் கட்சிகள் மௌனம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களின் மண்டையோடுகள் பாற்பற்களுடன் மீட்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். 37 ஆவது நாட்களாக இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியின்போது சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் இருந்ததாகவும் ஆகவே சடலங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை எனவும் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, கூறுகின்றார். களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.
ஜூலை 20 19:10

மனிதப் புதைகுழி யாழ் நாயன்மார்க்கட்டில் கண்டுபிடிப்பு- இலங்கைப் பொலிஸார் விசாரனை நடத்துவார்களா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் போர்க்கால மனிதப் புதைகுழிகள் கட்டட நிர்மாணப் பணிகளின்போது கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், அது குறித்த விசாரனைகளை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இந்த நிலையில் மன்னார் நகர நுழைவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை அடுத்து, யாழ் கோட்டையிலும் மனித எலும்புக் கூடு ஒன்று மீட்கப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே அந்த எலும்புக்கூடு மீட்கப்பட்ட விவகாரம் மூடி மறைக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜூலை 20 17:32

குடும்பிமலையில் 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் காணிகளை சீனாவிடம் கையளிக்க மைத்திரி- ரணில் அரசு ஒப்பந்தம்?

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழபேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலையில் 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் காணியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கருமபுச் செய்கைக்காக இந்தக் காணியை வழங்கவுள்ளதாக இலங்கைப் பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை மையமாகக் கொண்ட குடும்பிமலை பிரதேசத்திற்கு அண்மித்த 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் பொதுக் காணியை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான உட்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 20 15:06

குடிநீர் வழங்க செட்டிக்குளம் பிரதேச சபை இணக்கம்- இலங்கை இராணுவத்தின் தலையீட்டைத் தடுக்கவும் ஏற்பாடு

(வவுனியா, ஈழம் ) வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குடிநீர் வழங்க செட்டிகுளம் பிரதேச சபை இணங்கியுள்ளதாக உறுப்பினர் ஜேசுதாஸ் டெல்ஷன் கூர்மை செய்தித் தளத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தார். வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு குடிநீர் வழங்க செட்டிக்குளம் பிரதேச சபை மறுத்துள்ளமை தொடர்பாக கூர்மைச் செய்தித் தளத்தில் நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இந்தச் செய்தி குறித்து வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உறுப்பினர் ஜேசுதாஸ் டெல்ஷனிடம் விளக்கம் கோரினார். அதனையடுத்து பிரதேச சபையின் தலைவர் ஆசீர்வாதம் அந்தோனிப்பிளை மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கவனத்திற்கு டெல்ஷன் கொண்டு சென்றார்.
ஜூலை 19 22:47

சிவானந்தா வித்தியாலய மாணவர்கள் குடிநீருக்கு இலங்கை இராணுவத்திடம் கையேந்தும் அவலம்- பெற்றோர்

(வவுனியா, ஈழம் ) தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சில தமிழ் அதிகாரிகளின் அலட்சியப் போக்குகள், கட்சி அரசியல் செயற்பாடுகள் காரணமாகவும் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக கிராமங்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாகாண சபைகளையோ, உள்ளூராட்சி சபைகளையோ தமிழர் தாயகத்தில் உரிய முறையில் செயற்பட முடியாதவாறு இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறைந்தபட்சம் பிரதேசங்களில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வாழும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் முன்வருவதில்லையென கல்வியாளர்களும் குறை கூறுகின்றனர்.
ஜூலை 19 13:11

அமெரிக்கா 80 பில்லியன்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது- அமைச்சர் நிரோஷன் அறிவித்தார்

(வவுனியா, ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு 80 பில்லியன்களை நன்கொடையாக வழங்கவுள்ளது. காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என இலங்கையின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்திற்கு இந்த உதவிகள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் நிரோஷன் பெரேரா எதுவும் கூறவில்லை. அதேவேளை,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா வடமாகாண சபையின் மூலமாக உதவியளிக்க வேண்டும் என முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.
ஜூலை 18 23:02

ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி எலும்புக்கூடுகள் மீட்பு, பெண்கள் அணியும் காப்பும் கண்டுபிடிப்பு- அதிகாரிகள்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான மன்னார் நகர நுழைவாசலில், இலங்கை அரசின் சதொச விற்பனை நிலைய கட்டுமான நடவடிக்கைகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து, ஒருவரை ஒருவர் அனைத்தவாறு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், பெண்கள் கைக்கு அணியும் காப்பு, எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்டுள்ளது. போர்க்கால மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அகழ்வு செய்யும் பணி இன்று புதன்கிழமை 36 ஆவது நாளாகவும் இடம்பெற்றது. தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வின்போது சந்தேகத்தை ஏற்படுத்தும் மனித எலும்புக்கூடுகள், எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் அகழ்வுப் பணியை விரிவுபடுத்தும் ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜூலை 18 15:51

இலங்கைப் படையின் முன்னாள் உயரதிகாரி சரத் வீரசேகர கொலை மிரட்டல்- சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்படுவதை முற்றாகவே நிரகரிக்கும் வகையில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கேற்ற முறையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. போருக்கு முன்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனைகள் இருந்ததில்லையென விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கூறிய பின்னர், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. விஜயகலா சிங்களக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய உரையில் சொல்லப்பட்ட விடங்கள் உண்மையானவை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியாயப்படுத்தினார். இதனால் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்ற 17 ஆம் திகதி அவரை விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர்.
ஜூலை 17 22:39

யாழ். சுழிபுரம் திருவடிநிலை பிரதேசத்தில் மண் அகழ்வு- மடக்கிப்பிடித்ததாக பிரதேச இளைஞர்கள் கூறுகின்றனர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் பொன்னாலை முதல் மாதகல் வரையான சுமார் எட்டுக் கிலோமீற்றர் நீளமுடைய கடற்கரையோர பிரதேசமாக இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் தமக்குத் தேவையான மணல்களை அகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சுழிபுரம்- திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் பிரதேச இளைஞர்களினால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை எனவும் பிரதேச இளைஞர்கள் கூறியுள்ளனர்.