நிரல்
ஓகஸ்ட் 23 15:36

திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை ஜப்பான் அரசும் கையாளும்- அச்சுறுத்தலுக்கு இணங்கியதா இலங்கை அரசு?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக ஜப்பான் எழுப்பிய பல கேள்விகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் விளக்கமளித்திருக்கின்றது. குறிப்பாக சீன அரசின் இராணுவ மூலோபாங்களுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லையென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கொழும்பில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேரட்ன, இட்சுனோரி ஒனோடெரா கூறியதை மறுத்துள்ளார். அதாவது சீனாவின் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என உறுதியளித்துள்ளார்.
ஓகஸ்ட் 23 00:10

முல்லைத்தீவில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பலாத்காரமாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள்

(முல்லைத்தீவு, ஈழம்) கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு- நாயாறு பிரதேசத்திற்குத் தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்களிற்கே காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நிலங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என முல்லைத்தீவில் உள்ள இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்த உத்ரதரவையும் மீறிக் கொழும்பின் செல்வாக்குடன் சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 22 20:06

விவசாய நிலங்களில் சட்டவிரோத மண் அகழ்வு- இலங்கைப் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகளை இலங்கைப் பொலிஸ்ஸாரும் இலங்கை அரச அதிகாரிகளும் உதாசீனப்படுத்துவதாக விவசாய அமைப்பின் தலைவர் சி.கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செலயாளர் பிரிவிலுள்ள பாலாமடு வடக்கு விவசாயக் கண்டத்திலுள்ள சுமார் 900 ஏக்கர் காணிகள் அழிவடைந்து வருவது தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகளை கரடியனாறு பிரதேசத்தில் உள்ள இலங்கைப் பொலிஸாரும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளரும் கவனத்தில் எடுப்பதில்லை என கணேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 21 23:12

தமிழ்ப் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் சிங்கள மொழியில் கிடைத்ததாக முறைப்பாடு- அமைச்சர் மனோ மௌனம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனக் கடிதம் தனிச் சிங்களத்தில் வழங்கப்படுவதினால், தங்கள் பெயர்களைக் கூட வாசித்து அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால், இலங்கை முழுவதிலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடித்தில், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கும் தனிச் சிங்களத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 21 15:58

திருகோணமலைத் துறைமுகத்தில் ஜப்பான் போர்க் கப்பல், பாதுகாப்பு அமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு

(திருகோணமலை, ஈழம்) ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா (Itsunori Onodera) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவுக்குச் சென்ற இட்சுனோரி ஒனேடேரா, அங்கு சந்திப்புக்களை நடத்திவிட்டுப் புதுடில்லியில் இருந்து நேற்றுத் திஙகட்கிழமை இரவு 10.10க்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்ததை வந்ததடைந்தார். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்த அவர், இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது. ஆனால் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி செயலகம் எதுவுமே கூறவில்லை.
ஓகஸ்ட் 21 14:45

வெடுக்குநாறி மலைக்குச் சென்று வழிபடுவதை இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தடுக்க முடியாது- மக்கள் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம் ) கொழும்பை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் தமிழர் தாயகமான வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிசிவன் ஆலயத்தை கைப்பற்றவுள்ளமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெருமளவு மக்களும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர். கடந்த ஆடி அமைவாசை தினம் அன்று வழிபாடுகளுக்குச் சென்ற மக்களை இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள, இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனாலும் இலங்கைப் பொலிஸாருக்கு நிலைமையைத் தெளிவுபடுத்திய மக்கள், பின்னர் வெடுக்குநாறி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஓகஸ்ட் 20 21:21

மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிப்பு- படுவான்கரை பிரதேசத்தில் வீதிகள் திருப்படவில்லை என முறைப்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) மட்டக்களப்பு மாவட்டத்தின் தொண்ணுறு சதவீதமான வளங்கள் படுவான்கரை பகுதியில் உள்ளதுடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற நிலையில், தங்களது விளைபொருட்களை கொண்டு செல்வதற்கான பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதாக ஆயித்தியமலை கண்டத்தின் வட்டவிதானை சுப்பிரமணிம் தெரிவித்தார். விளைநிலங்கள் அனைத்தும் படுவான்கரை பகுதியில் காணப்படுகின்றது. ஆனால் அப்பகுதிக்குச் செல்வதற்கான பாதைகள், பாலங்கள் புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்படுவதினால் விவசாயிகள் தமது விளைபொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுப்பிரமணிம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 20 16:27

அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைக்க ரணில் திட்டம்? அமைச்சர் சர்வேஸ்வரன் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான வடமாகாணத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விகாரைகளை நிர்மாணித்து பௌத்த பிக்குமார் தங்குவதற்கான இல்லங்களையும் அமைப்பதற்கு திட்டமிடுவதாக வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். சென்ற 14 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கிளிநொச்சிக்கு திடீரெனச் சென்ற ரணில் விக்கிரமசிங்க, அங்கு பௌத்த பிக்கு ஒருவரை சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் பௌத்த குருமாரை தென்பகுதியில் இருந்து கிளிநொச்சிக்கு வரவழைத்து தங்கவைப்பதங்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக சர்வவேஸ்வரன் கூறியுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஓகஸ்ட் 20 00:11

பொன்னாலை பிரதேசம் தொடக்கம் சம்பில்துறை வரை மண் அகழப்படுவதால் நிலத்தடி நீருக்கு ஆபத்து- சபை உறுப்பினர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாலைப் பிரதேசம் தொடக்கம் சம்பில்துறை வரையான பிரதேசங்களில் மணல் அகழ்வதால், எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி வலி.மேற்கு பிரதேசசபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு பின்புறத்தில் இருந்து சம்பில்துறை வரையான கரையோரப் பிரதேசத்தில் ஏற்கனவே யுத்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் தமது தேவைக்கு மணல் அகழ்ந்திருக்கின்றனர். அந்த இடங்களில் பெரும் கிடங்குகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த இடத்தில் தற்போதும் தொடர்ந்து மணல் அகழ்வு இடம்பெறுகின்றமை ஆபத்தானது என பிரேரணையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 19 21:41

கொழும்பு அரசியல் செல்வாக்குடன் குடியேற்றம் செய்யும் நேக்கில் மட்டக்களப்பில் காடுகள் தீயிட்டு அழிப்பு- மக்கள் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக இல்ங்கை வனவள இலாகாபகுதியினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கொழும்பு- மட்டக்களப்பு ஏ4 பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள காடுகளுக்கு இனம் தெரியாத நபர்கள் தீமூட்டியுள்ளனர். இலங்கையின் காட்டுவளத்தை 37 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மைத்திரி- ரணில் அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில், மட்டக்களப்பில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.