நிரல்
செப். 15 12:51

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு

வடமாகாணம் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள போர்க்கால மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் 71 ஆவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. கைகால்கள் பிணைக்கப்பட்டவாறு மூன்று எலும்புக்கூடுகள் தென்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதைகுழி அகழ்வுப் பணிகள் வியாழக்கிழமை இடம்பெற்றபோது கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவில்லையெனவும் மீட்ப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
செப். 14 23:35

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையென கண்டனம்

(மன்னார், ஈழம்) இலங்கை வடபுல கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. மாறாக இந்திய மீனவர்களின் படகுகளைக் கையளிப்பதில் மாத்திரம் அதீத அக்கறை காட்டுவதாக வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையத்தின் தலைவரும், மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் உபதலைவருமான எம்.ஏ.ஆலம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இலங்கை வடபுல கடற்பரப்பிற்குள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்றன. இவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறையினால் வடபுல கடற்பரப்பில் மீன்வளம் மிக வேகமாக அழிவுறும் அபாயமும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செப். 14 19:22

திருகோணமலையை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்தது மோடி அரசு

மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வியாழன் வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த மாத இறுதிப் பகுதியில் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இதே திருமலையில் மேற்கொண்டிருந்ததன் இணைபிரியாத் தொடர்ச்சியே இதுவாகும். இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்புச் செய்தல் என்று அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியாவும் திருகோணமலையை மையப்படுத்தி இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகுந்த முனைப்புக் காட்டிவருகின்றன.
செப். 14 18:36

வவுனியா அருவியாறு நீர்த்தேகக் கதவுகளைத் திறந்து நீரைப் பயன்படுத்தும் இலங்கை இராணுவம்- விசாயிகள் பாதிப்பு

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்று நீர்த்தேக்க துருசுக் கதவுகளை இலங்கை இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து பயன்படுத்துவதால் விவசாயச் செய்கையை கைவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். அருவியாறு பாவற்குளத்திலிருந்து செட்டிகுளம் ஊடாக பாய்ந்து செல்கின்றது. இவ்வாறு பாய்ந்து செல்லும் அருவிக்கு அருகில் உள்ள கிறிஸ்தவகுளத்தில் அருவித்தோட்டம் என்ற பகுதியில் அணைக்கட்டொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருவித்தோட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் நீண்டகாலமாக ஈடுபட்ட விவசாயிகள், இலங்கை இராணுவத்தின் அத்துமீறிய செயற்பாடுகளினால் எதுவுமே செய்ய முடியாதநிலையில், விவசாயச் செய்கையை கைவிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
செப். 13 22:47

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மீதான விசாரணையைத் தடுக்க மைத்திரி முயற்சி- அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை முப்படைகளின் பிரதானியும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்குச் செல்வதை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. மாணவர்கள் உட்பட 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் வெள்ளைவானில் கடத்தப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் கடற்படை அதிகாரியான நேவி சம்பத் பிரதான எதிரியாவார். அவர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாய்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ணவை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்ற பத்தாம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தது.
செப். 13 11:42

ஏறாவூர்ப்பற்று புன்னக்குடா பிரதேசத்தில் ஆட்லறி பயிற்சி முகாம் அமைக்க இலங்கை இராணுவம் முயற்சி

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு புன்னக்குடா பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணியில் இலங்கை இராணுவத்தின் ஆட்லறி பயிற்சி முகாமை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்திருந்தது. அதன் பின்னர் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் குடியிருப்புக் காணிகளில் சுமார் 15 ஏக்கர் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டன. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் 1990ஆம் ஆண்டு முறக்கொட்டாஞ்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணியின் பத்து ஏக்கரில் இலங்கை இராணுவத்தின் எட்டாவது ரெஜிமெண்ட் தலைமைக் காரியாலயமாக செயற்பட்டு வந்தது.
செப். 13 10:52

பூநகரி கரியாலை நாகபடுவான் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இலங்கை இராணுவச் சிப்பாய்கள் இருவர் அட்டகாசம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாணம் கிளிநொச்சி பூநகரி கரியாலை நாகபடுவான் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் வந்து குற்றச் செயலில் ஈடுபட முற்பட்ட இலங்கை இராணுச் சிப்பாய்கள் இருவரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இராணுவச் சிப்பாய்கள் ஏற்கனவே இந்தக் குடியிருப்புக்குள் புகுந்து பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பல தடவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. இலங்கை இராணுவச் சிப்பாய்கள் வீடுகளுக்குள் புகுந்து மேற்கொண்டு வரும் தொந்தரவுகள் குறித்து ஆதாரத்துடன் முறையிட வேண்டும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். இலங்கைப் பொலிஸாரும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
செப். 12 23:22

நந்திக்கடலில் பெருமளவு மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன- மீனவர்கள் கவலை, தொழில் பாதிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் அதிக கடல்வளத்தைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் அதிகளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அதிக உப்புச்செறிவு காரணமாகவே மீன்கள் உயிரிழந்துள்ளன. இதனால், கடற்கரையோரத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுத் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மீது, சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடாத்தி, அவர்களது வளங்களை சூறையாடி, அவற்றை அழித்தொழித்தும் வருகின்றனர்.
செப். 12 22:00

தாழ்வுபாடு கிராமத்தின் கடற்கரையோர வீதியை வழி மறித்து இலங்கைக் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு மீனவ கிராமத்தின் கடற்கரையோரமாகவுள்ள வீதியை மறித்து இலங்கை கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இதனால் முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன்னார் தாழ்வுபாடு மீனவ கிராமத்திலிருந்து ஓலைத்தொடுவாய், பேசாலை, நடுக்குடா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அண்டி, முப்பது வருடங்களாக பாதை ஒன்றும் உபயோகத்தில் உள்ளது. மேலும் தாழ்வுபாட்டில் இருந்து ஓலைத்தொடுவாய் வரை நன்கு செப்பனிடப்பட்டு பெருமளவு பொதுமக்களும் நூற்றுக்கணக்கான மீனவர்களும் தினமும் பயன்படுத்தும் இவ்வீதி ஓலைத்தொடுவாயிலிருந்து தலைமன்னார் கடற்கரை வரை மணல் வீதியாக உள்ளது. அத்துடன் குறித்த பாதை தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் வரை நீண்டும் செல்கின்றது
செப். 12 15:18

கல்லாறுப் பாலத்திற்கு அருகாகவுள்ள தேக்கம் நீர்த்தேக்கப் பகுதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம் ) வட மாகாணம் வவுனியா மாவட்டத்தில் மன்னார் மதவாச்சி பிரதான வீதிக்கு அன்மித்தாகக் காணப்படும் கல்லாறு பாலம் 1875ஆம் ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இங்கு காணப்படும் தேக்கம் என்ற பிரதான பகுதி கருங்கற்களினால் அமைக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கமாகும். தேக்கம் என அழைக்கப்படும் இந்தப் பிரதான பகுதியில் உள்ள இந்நீர்த்தேக்கத்திற்கு நீராட, தற்போது பெருமளவு மக்கள் வந்து செல்கின்றனர். கல்லாறு பாலத்தைச் சூழவுள்ள இயற்கை அழகுள்ள இந்த பிரதேசத்தில் அதிகளவு வளங்களும் உள்ளன. விவசாயச் செய்கைக்கும் இதனை பயன்படுத்த முடியும். ஆகவே செட்டிகுளம் பிரதேச சபைக்கு வருமானம் தரக்கூடிய வகையில் பாலத்திற்கு அன்மித்த தேக்கம், நீர்த்தேக்கப் பகுதியை புனரமைக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஜேசுதாஸ் டெல்சன் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.