நிரல்
ஓகஸ்ட் 10 20:04

றிஸாத் பதியூதீன், சகோதரர் றியாஜ் ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(மன்னார், ஈழம்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 10ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் றிஸாத் பதியூதீனும் அவரின் இளைய சகோதரர் றியாஜ் பதியூதீனும் முதன் முதலாக கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஐர் செய்யப்பட்ட சமயம் சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஓகஸ்ட் 09 20:28

வவுனியாவில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு இருவர் புதிதாக நியமனம்

தமிழர் தாயகமான வட மாகாணம் வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சிசபைகளுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருமான அ. சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வவுனியா நகர சபை மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ஆகிய இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கே இரண்டு புதிய உறுப்பினர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 08 16:42

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் பீரிசுடன் சுமந்திரன் சந்திப்பு

புவிசார் அரசியலில் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் அமெரிக்காவுக்கு பசில் ராஜபக்ஷ பயணித்திருந்தபோது இரகசிய நகர்வொன்றை முன்னெடுத்திருந்தது. பசில் ராஜபக்ஷவுடனும் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான புலம்பெயர் தமிழ்க்குழு ஒன்றுடனும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. சுமந்திரனுடனும் இணக்கத்தை ஏற்படுத்தி ஓர் இரகசிய நகர்வை ஆரம்பித்த தகவலையும் அதன் புவிசார் அரசியற் பின்னணியையும் ஜூன் 20ம் திகதி கூர்மை ஆசிரியபீடம் வெளிப்படுத்தியிருந்தது. இந்த இரகசிய நகர்வின் அடுத்த கட்டம் தற்போது அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் அலெய்னா தெப்லிஸின் முன்னிலையில் அமைச்சர் பீரிசுடன் சுமந்திரன் இரகசியமாகக் கலந்துரையாட வைக்கப்பட்டதன் மூலம் நகர்த்தப்பட்டிருக்கிறது.
ஓகஸ்ட் 07 21:55

மன்னாரில் பெறப்பட்ட டெல்ரா வைரஸ் மாதிரிகள் ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடந்த வாரம் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களிடம் திரிபடைந்த டெல்ரா வைரஸ் பரவியுள்ளதா என்பதனை அறியும் வகையில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகள் கொழும்பு ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு மரப்பணுப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி டொக்டர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 06 23:11

முடக்கும் நோக்கம் இல்லையென அறிவிப்பு- ஒருவாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 266

(மட்டக்களப்பு, ஈழம் ) வடக்குக் கிழக்கு உட்பட கொவிட் 19 நோய்த் தொற்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத்தீவு முழுவதையும் முடக்கும் நோக்கம் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 98 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 94 பேரும் செவ்வாய்க்கிழமை 74 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஓகஸ்ட் 05 20:03

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லை

(மட்டக்களப்பு, ஈழம் ) இலங்கையில் கோவிட் நோய் தொற்றினால் மரணமடைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்த ஓட்டமாவடி மஜ்மா நகர் சூடுபத்தினசேனையில் மேலும் சுமார் அறுநூறு உடல்களை அடக்கம் செய்வதற்கான நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. அத்துடன் தினமும் பதினைந்தில் இருந்து முப்பது சடலங்கள் இப்பகுதியில் அடக்கம் செய்யப்படுவதால் சுமார் ஒரு மாதத்தின் பின் குறித்த பகுதியில் சடலங்கள் எவற்றையும் அடக்கம் செய்வதற்கு முடியாத நிலை ஏற்படும் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ. எம். நௌபர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 04 22:13

அதிகரிக்கும் கொவிட் தொற்று- இன்று 2543 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

(மன்னார், ஈழம்) இலங்கையில் அதி தீவிரமாக கொவிட்-19 நோய்த்தொற்று பரவிவரும் நிலையில் கடந்த சில தினங்களாக நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளது. இன்று புதன்கிழமை 2543 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதியும் கொவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 03 22:18

கொவிட் தொற்றுக்கு ஒருநாளில் 74 பேர் உயிரிழப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கைத்தீவில் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்துகளை மீண்டும் உடனடியாக நிறுத்திக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாத்திரம் கொவிட் மற்றும் டெல்ரா தொற்றுக்களினால் பாதிக்கப்பட்டு 74 பேர் உயிரிழந்துள்ளனர். சென்ற முதலாம் திகதியில் இருந்து போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் நெருக்கமாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் செல்வதை அவதானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 03 20:38

மன்னாரில் கொவிட் தொற்றால் பெண் ஒருவர் மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை கொவிட்- 19 நோய்த் தொற்றினால் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இதனால் மன்னார் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார். கொவிட் தொற்றினால் பீடிக்கப்பட்ட களுத்துறையைச் சேர்ந்த குறித்த பெண் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கள் இரவு இவர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே செவ்வாய் காலை இவர் மரணமடைந்ததாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 02 23:02

அதிகரிக்கும் டெல்ரா வைரஸ்- சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொவிட் மற்றும் டெல்ரா வைரஸ் போன்ற பல திரிபுகள் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கேமந்த கேரத் தெரிவித்துள்ளார். நேற்று முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியர் கேமந்த கேரத் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.