நிரல்
மார்ச் 22 20:59

உக்ரெய்ன் போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியலும், ரசியா-சீனா தொடர்பான இந்திய வில்லங்கமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) 1980களில் பனிப்போர் காலத்தில் இந்தியா எப்படி ரசியாவுடன் மறைமுகப் புரிந்துணர்வைப் பேணியதோ, அதேபோன்று விரும்பியோ விரும்பாமலோ ரசியாவுடனும் ரசியா ஊடாகச் சீனாவுடனும் இராஜந்திர உறவைப் பேண வேண்டிய நிலையை இந்தியாவுக்கு உக்ரெயன் போர் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இலங்கை அமெரிக்காவின் பக்கம் செல்லும் நிலையும் ஏற்படலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் தமது அதி உச்சக் கோரிக்கையை இந்தியாவிடம் கூட்டாக முன்வைக்க வேண்டியதொரு காலகட்டத்தையே உக்ரெயன் போரக்குப் பின்னரான சூழல் உருவாக்கியுள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான ஐயத்துக்கும் இடமின்றித் தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டிய பொறுப்பை கருத்துருவாக்கிகள், சிவில் சமூக அமைப்புகள் விரைந்து கையாளவேண்டும்.
மார்ச் 20 15:48

குழப்பமான கருத்துக்களை முன்வைக்கும் சிவாஜிலிங்கம் தமிழ் நாட்டில் என்ன சொல்லப் போகின்றார்?

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர் அரசியல் விடுதலை தொடர்பான கருத்துக்களில் அவ்வப்போது குழப்பமான நிலைப்பாட்டோடு செயற்பட்டு வரும் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் நாட்டில் எவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போகின்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டு, தற்போது தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ள சிவாஜிலிங்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பேசவுள்ளதாகவே அவரது கூட்டமைப்பின் வட்டாரங்கள் கூறுகின்றன.
மார்ச் 19 23:37

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சர்வகட்சி மாநாடாக அனைத்துக் கட்சிகளோடும் பேசத் திட்டம்

(வவுனியா, ஈழம்) அமெரிக்க- இந்திய அரசுகளின் நகர்வுகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அதிகாரப் பரவலாக்கம் பற்றி உரையாடவிருந்த நிலையில், சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். சென்ற 15 ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையிலேயே சந்திப்புத் திடீரென பிற்போடப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சந்திப்பதென கூறப்பட்டிருந்தது. இந்தவொரு நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துக் கோட்டாபய ராஜபக்ச உரையாடவுள்ளதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
மார்ச் 18 22:04

இறுதிப் போரில் நடந்த குற்றங்கள், மனித அவலங்களுக்கு உரிய தீர்வில்லை- மன்னார் ஆயர்

(மன்னார், ஈழம்) இலங்கை அரசாங்கம் இறுதிப் போரில் நடந்தேறிய போர்க் குற்றங்களுக்கும், மனித அவலங்களுக்கும் உரிய நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது. அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்களுக்குரிய சூத்திரதாரிகளையும் இலங்கை அரசாங்கம் இதுவரை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. இவ்வாறான தருணத்திலே, இலங்கை கத்தோலிக்க திருச்சபை நீதி வேண்டி சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை உருவாக்கியதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்ச் 17 23:41

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்கள் அடகுவைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு இந்தியா நிதியுதவி

(யாழ்ப்பாணம், ஈழம்) புதுடில்லிக்குச் சென்ற இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள வளமுள்ள பிரதேசங்களை இந்தியா கையாள்வதற்குரிய வசதிகளுக்கான வாக்குறுதிகளை நேரடியாகவே வழங்கியுள்ளார். இதன் பின்னரே இலங்கைக்கு ஒரு பில்லியன் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா இலங்கையுடன் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக புதுடில்லியும் கொழும்பும் செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தாலும் முழுமையான விபரங்கள் அதில் இல்லை. ஆனாலும் டில்லி உயர்மட்டத்தில் இருந்து சில விடயங்கள் கசிந்திருக்கின்றன.
மார்ச் 16 07:55

பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் திட்டம்

(முல்லைத்தீவு) இலங்கை ஒற்றையாட்சிக்குள் ஈழத் தமிழர்களையும் இணங்கி வாழவைக்கும் அமெரிக்க- இந்திய நகர்வுகளின் மற்றுமொரு கட்டமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் தமிழகத்துக்குச் சென்று வந்திருக்கிறார். ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கடந்த வாரம் தமிழகம் சென்று வந்தாலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றுதான். அதாவது அறிவுறுத்தும் அரசியலுக்கு (Instruction politics) உட்பட்டதே.
மார்ச் 15 21:19

கொழும்பில் சஜித் அணி மாபெரும் போராட்டம்

(முல்லைத்தீவு) பதவியை விட்டு விலக வேண்டும் அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. கொழும்பு காலி முகத்திடலில் நிறைவடைந்த பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் உரையாற்றிய சஜித் பிரேமதாசா, அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மார்ச் 14 10:29

இன ஒடுக்கலை மூடிமறைக்கும் மேற்குலக ஜனநாயகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதாவது அமெரிக்கச் சார்பு நாடுகள் கூறுகின்ற ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்குள் ரசியா இல்லை என்ற கருத்தியலின்படியே, உக்ரெயன் மீது ரசியா நடத்தும் போரைச் சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் ரசியாவில் தற்போது கம்யூனிசச் சாயல் மாத்திரமே உண்டு. ரசியாவும் ஒரு வகையான முதலாளித்துவமுறை (Capitalism) கொண்ட பேரரசுதான். ஜனநாயகக் கட்டமைப்பு இருப்பது போன்றதொரு தோற்றப்பாடுகளும் ரசியாவில் உள்ளன. ஆனால் ரசிய- சீன உறவு கம்யூனிச அடிப்படையிலானதல்ல. அமெரிக்கச் சார்பு நாடுகளை எதிர்க்கும் மையம் கொண்ட இராணுவ அரசியல் அது. பொருளாதாரப் பிணைப்புகளும் இந்த இரு நாடுகளிடம் உண்டு.
மார்ச் 13 10:29

கொழும்பில் மாபெரும் பேரணிக்கு ஜே.வி.பி ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்தின் ஊழல் மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் தொடர்ச்சியான விலைவாசி உயர்வைக் கண்டித்து, ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் ஜே.வி.பி கேட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தைக் கவிழ்த்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால்கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பி எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா கூறுகின்றார்.
மார்ச் 12 10:44

வடமாகாணத்தில் தமிழர்களின் தொல்லியல்சார்ந்த பிரதேசங்களில் சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கைகள்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் தமிழர்களின் சமய, கலை கலாச்சாரத் தொன்மை, தொல்லியல் சார்ந்த பல இடங்களில் சட்டவிரோத புதையல் தோண்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிநவீன டிஜிடல் உபகரணங்கள் மற்றும் ஸ்கேனர் சாதனத்தின் உதவியுடன், வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் மேற்படி புதையல் அகழும் நடவடிக்கையில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு உடையவர்களும், சில பெளத்த குருமாரும் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் ஈடுபடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.