கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
ஜூன் 01 13:24

மலையகத் தமிழர்களின் கூட்டிருப்புக்கு விடுக்கப்படும் சவால்

இந்திய வம்சாவளி தமிழர்களா அல்லது மலையகத் தமிழர்களா எமது அடையாளம் என்ற சர்ச்சைகள் மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தேசிய இன அரசியலுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு ஏனைய மக்களைப் போன்று அரசியல் உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு தமக்கான ஓர் அடையாளம் இருக்க வேண்டியது மலையக மக்களுக்கு மிக மிக அத்தியவசியமான விடயமாக இருக்கின்றது.
ஏப். 13 09:53

செய்தித்துறையின் பாடநூல் மாணிக்கவாசகம்

(வவுனியா, ஈழம்) ஒரு செய்தியாளனுக்கு மிகுந்த பொறுமை வேண்டும். அவசரப் படவோ பதட்டப் படவோ கூடாது. பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்பும் வரை பல இடையூறுகள் ஏற்படும். அவற்றை எல்லாம் மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினையாக்கும் (Effort Will Pay Off) என்ற தெளிவோடு நடைமுறையில் அதுவும் போர்க் காலத்தில் செயற்படுத்திக் காண்பித்தவர்தான் மூத்த செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம். 
மார்ச் 26 09:36

வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும்

(மட்டக்களப்பு, ஈழம்) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது. 'குறள் ஆய்வுச் செம்மல்' 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பல பட்டங்களைப் பெற்ற ஈழத்தமிழ் அறிஞர் கா.பொ. இரத்தினம், வள்ளுவரை சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று வரைவு செய்திருக்கின்றார்.
பெப். 25 23:04

குர்திஸ்தான் மக்களுக்கு நேர்ந்த அவலம்- புலம்பெயா் தமிழர்களுக்கு பாடம்!

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியில் அதி உச்சத் தொடர் வெற்றிகளைக் கண்டுகொண்டிருந்த பின்னணியிலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. இன விடுதலைக்கான போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. எந்தவொரு போராட்டத்துக்கும் அரசியற் காரண காரியங்கள் உண்டு. இராணுவ ரீதியிலான போராட்டத்தின் வெற்றி ஒரு கட்டத்தை மேம்படுத்தும் போது, அதற்கு அடுத்த கட்டமாக அரசியல் ரீதியான அதுவும் ஜனநாயக விழுமியங்களைப் பேணக் கூடிய நெறி முறைகளை நுட்பமாகக் கையாள வேண்டியது அவசியமானது. அதனை மையமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் 2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான சமிக்ஞையைக் கொடுத்தனர்.
பெப். 19 07:06

கம்பன் விழா, தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் முயற்சியில்!

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பாட்டை உணர்த்தி நடத்தப்பட்டதா அல்லது வட இந்திய புனை கதைகளுக்கும் அதன் வழி வந்த பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ந்ததா என்பதை விழாவில் பங்குபற்றியோர் புரிந்திருப்பர். "அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் சுமந்திரனா அனுமனா" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் ஈழத்தமிழர் தொடர்பாகப் பேராசிரியர் வரதராஜன் ஸ்ரீபிரசாந்தன் மற்றும் ஆசிரியரும், பேச்சாளருமான செல்வவடிவேல் ஆகியோர் இரண்டு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளனர்.