கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஏப். 22 19:44

உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஏப். 18 16:10

மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். முதலில் மாகாண சபைத் தேர்தல்களே நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான காலம் பிந்தியுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கைச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஏலவே கடிதம் அனுப்பியுள்ளார்.
ஏப். 10 16:03

சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு மூன்றின் கீழ் (International Covenant on Civil and Political Rights) (ICCPR) கைது செய்யப்பட்டே முப்பத்தி மூன்று வயதான சக்திக சத்குமார நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏப். 09 18:30

கோட்டாபய போட்டியிடுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்- மேதினக் கூட்டத்தில் உரையாற்றுவார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே சர்வதேச மட்டத்திலான சதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிப்பார் என்றும் அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சதி முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படுமெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவாரென்றும் அன்றில் இருந்து அவருடைய அரசியல் பயணம் ஆரம்பிக்குமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.
மார்ச் 30 16:45

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி-

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா மாவட்டத்தில் தற்போது தமிழர்கள் 83 வீதம் முஸ்லீம்கள் ஏழு வீதம் சிங்களவர்கள் பத்து வீதமும் உள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னரு வவுனியாவில் குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமும் சிங்களக் குடியேற்றத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வவுனியா மாவட்டத்தை இலக்கு வைத்து குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ் உறுப்பினர்கள் பலரும் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தனர்.