கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூன் 18 11:12

இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு நெருக்கமாக முயற்சி

(வவுனியா, ஈழம்) தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் கைவிடக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. 2016 ஆம் ஆண்டு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல்களைக் குறைந்த பட்சம் இந்த ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஐம்பத்தொரு நாட்கள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியவில்லை.
ஜூன் 10 10:43

நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் நான்கு மணி நேரப் பயணமாகக் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியளிக்கும் என்று பகிரங்கமாகவே உறுதியளித்துள்ளர். பூகோள அரசியலில் சிக்குண்டுள்ள இலங்கையில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளமை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்ற நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவோடு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கைளச் செய்துமுள்ளார்.
ஜூன் 01 22:26

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகை காரியாலயம் 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இலங்கையில் கொழும்பில் இருந்து பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிக முக்கிமான பங்கு வகித்திருந்தது.
ஜூன் 01 11:36

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாகி 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்களின் கல்வி மற்றும் கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய பொது நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டமை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் 1977ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மே 28 10:31

அமெரிக்காவுக்கு எழுந்துள்ள சந்தேகம் - மகிந்த அணியோடும் பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) சீன-இலங்கை பாதுகாப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான முன்நகர்த்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழமையாக வெளிப்படுத்தப்படவில்லையென கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழமை. குறிப்பாக ஜே.வி.பி அந்த விடயத்தில் கடும் பிடியாகவே இருக்கும். ஆனால் சீனாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட முன் நகர்த்தல் ஒப்பந்தம் குறித்து ஜே.வி.பியோ, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியோ இதுவரை கேள்வி எழுப்பவில்லை.