கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஒக். 11 22:30

பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய மூன்று முனைகளில் இருந்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளடங்கலான பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகை நதிக்கரையில் வழக்கில் இருந்த எழுத்துமொழிக்கும் ஈழத்தில் வெளிப்பட்டிருக்கும் தொல்லியல் சான்றுகளுக்கும் இடையிலான காலம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான ஒற்றுமைகளை அறிவதில் ஈடுபாடு காட்டினர்.
செப். 25 10:34

‘அச்சாப்பிள்ளை’ அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
செப். 05 08:06

அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வு- அம்பாறைக் கடலில் கப்பல் தீப்பற்றியது எப்படி?

(யாழ்ப்பாணம், ஈழம்) கிழக்கு மாகாணம் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமன்ட் (Mt New Diamond) என்ற கப்பல் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் ஒடிசா துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த மெற் நியு டைமன்ட் என்ற கப்பல் தீப்பற்றியிருக்கிறது.
ஓகஸ்ட் 27 14:43

மூன்றாவது யாப்பை உருவாக்கப்போகும் ராஜபக்ச ஆட்சி

(மட்டக்களப்பு, ஈழம் ) ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையில் கூறியுள்ளமை ஆச்சரியப்படக் கூடியதல்ல. ஏனெனில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக மாறியபோதே இலங்கை ஒற்றையாட்சி அரசு (Unitary State) நிறுவப்பட்டுள்ளது. 1972ஆம் உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசு ஆகிய பின்னர் முதன் முதலாக உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒரே நாடு ஒரு சட்டம் என்பதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரகடனப்படுத்தியது.
ஓகஸ்ட் 13 22:46

ராஜபக்சக்களின் மீள் எழுச்சி சர்வதேசத்துக்கான செய்தி என்ன?

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம், நினைத்ததைச் சாதிக்கவில்லை. புதவிக்கு வந்த மூன்றாம் மாதம் ஆரம்பித்த மைத்திரி- ரணில் முரண்பாடு, ராஜபக்ச குடும்பத்திற்கும் அந்தக் குடும்பத்தை நம்பி அரசியலில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அதன் பெறுபேற்றை, 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இருநூறுக்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ராஜபக்ச அணி வெளிப்படுத்தியது. தமது அதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.