கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 09 10:12

ஒற்றையாட்சியை பாதுகாக்க முற்படும் சட்டத்தரணிகள் சங்கம்- கேள்வி எழுப்பத் தயங்கும் தமிழ்ச் சட்டத்தரணிகள்

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காணும் நோக்கில், சிங்களத் தலைமைகளை மையமாகக் கொண்ட இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்கள் குறித்துத் தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைதியாக இருக்க முடியாதென்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டுமென்ற பரிந்துரை மாத்திரம் தீர்வாகாது என்ற சட்ட வியாக்கியானங்களை வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டும்.
மே 02 23:12

தேரர்களின் வேண்டுதல் நிறைவேறும்- மகிந்த விலகி புதிய பிரதமரை நியமிக்கலாம்- ரணில், சஜித் மறைமுக ஆதரவு!

(கிளிநொச்சி, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோராமல், விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்குச் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் பிரகாரம் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்படுகின்றது போல் தெரிகின்றது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிப் புதிய ஒருவர் அரசாங்கத்துக்குள்ளேயே தெரிவு செய்யப்படுவாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார். எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் தனது பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைப்பாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏப். 25 13:12

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதிகாரங்களை இடம் மாற்றும் சதுரங்க விளையாட்டில்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட பின்னரும்கூட சிங்கள அரசியல் கட்சிகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்தல் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் புதுப்பித்து 21 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அதாவது மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளைச் சாதகமாக்கி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதிகாரங்களை அப்படியே இடம்மாற்றுகின்ற சதுரங்க விளையாட்டில் (Playing chess) ஈடுபடுகின்றன. மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
ஏப். 24 09:59

வடக்குக் கிழக்கு மக்கள் ஏன் பங்கெடுக்கவில்லை?

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் விலைவாசி உயர்வு நெருக்கடிகளினால், சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற மார் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த எதிர்ப்புப் போராட்டம், தற்போது தீவிரமமைடந்து வரும் நிலையில். வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள், சிங்கள மக்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
ஏப். 23 20:53

விசாரணைகளின் உண்மைத் தன்மை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று இன்று 21 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதையடுத்து இன்று நாடெங்கிலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பல ஆலயங்களில் ஆராதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகள், கடந்த சில மாதங்களாக, நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று, ஓங்கி ஒலித்த நிலையில் மேற்படி கோஷங்கள் யாவும் தற்பொழுது வலுவிழந்து அநேகராலும் மறக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.