செய்தி: நிரல்
ஏப். 02 23:23

இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டு 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 251 பேர் தொற்றிருப்பதாகச் சந்தேசிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேகாலை பின்னவலைப் பிரதேசத்தில் 51 குடும்பங்கள் நேற்றுப் புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலம் அதிகரிக்கலாம் என்று இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் 31 22:17

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு- வடமாகாணத்தில் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று செவ்யாக்கிழமை மேலும் அதிகரித்துள்ளது. இன்று இரவு 7.30 வரை 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று 122 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 142 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தாவர்களினாலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதாக இலங்கைச் சுகாதா அமைச்சு கூறியுள்ளது. சென்ற 15 ஆம் திகதியின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் தம்மைப் பதிவு செய்ய வேண்டுமெனக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளை முதலாம் திகதியோடு முடிவடைகின்றது.
மார்ச் 30 22:11

கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்;கிறது. இன்று தி்ங்கட்கிழமை இரவு மேலும் ஐந்துபேர் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே 117 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். தற்போது 122 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கொழும்பு, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு ஐ.டி.எச் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேரின் நிலை ஆபத்தாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தொற்றுக்குள்ளான பலர் மறைந்திருப்பதாக இலங்கைப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 29 21:22

இலங்கையில் 117 பேருக்குத் தொற்று- முல்லைத்தீவில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள்

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்;கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் இருவர் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே 115 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தனர். தற்போது 117 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான இருவரும் இரத்தினபுரி, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவனைக்கு மேலதிகச் சிகிச்சைக்காக மாற்ற்ப்பட்டுள்னனர். அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களும் கன்டியில் ஒரு பிரதேசமும் சுற்றிவளைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் சிலருக்கு வைரஸ் தொற்றியுள்ளாதால் இரு பிரதேசங்களிலும் வசிப்பபோர் வெளியே செல்ல முடியாதென்றும் உள்ளே யாரும் போக முடியாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 22:22

இலங்கையில் ஒருவர் உயிரிழந்தார்- 20 ஆயிரம் பேர் வாழும் பிரதேசம் சுற்றிவளைத்து மூடப்பட்டது

(வவுனியா, ஈழம்) இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பின் புநகர் பகுதியான களுத்துறை மாவட்டம் அட்டலுகம பிரதேசம் இலங்கைப் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயளியொருவர் இனம் காணப்பட்டதையடுத்தே இந்தப் பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியே வர முடியாதென்றும் உள்ளே செல்ல அனுமதியில்லையெனவும் கொரோன விவகாரத்தைக் கண்காணிக்கும் இலங்கை இராணுவக் கேர்ணல் கமால் ஜயசூரி தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தைச் சுற்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் காவல் புரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.