செய்தி: நிரல்
ஒக். 13 23:24

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவார? சரணடைவாரா?

(மன்னார், ஈழம் ) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அல்லது நாளை புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்படலாமென இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் ரிஷாட் பதியுதீன் நாளை புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியோடு சரணடைவாரென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் அவரைக் கைது செய்யவதற்கு முன்னர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் சரணடைவாரென்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒக். 10 11:23

வரலாற்றுப் பாடநூல்களில், இலங்கை வரலாறா? சிங்கள பௌத்த வரலாறா?

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசம் உள்ளிட்ட இலங்கைத் தீவின் மொத்த வரலாற்றையும் வரலாற்றுப் பாடமாக அனைத்து பாடசாலைப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது கலைத்திட்டம் (பாடத்திட்டம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தனித்துவத்தை அறிந்து அதைப் பாதுகாத்து, உலகின் நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நாட்டுப்பற்றுள்ள ஆற்றல் நிறைந்த இலங்கையரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை கலைத் திட்டத்தில் கட்டாய மையப் பாடமாக 2007 ஆம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் பாடம் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக் கல்விக் கொள்கை மறுசீரமைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
ஒக். 09 22:59

பிசிஆர் பரிசோதனைகளின்றி சீனத் தூதுக் குழுவினர் வருகை

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு வருகை தந்துள்ள 26பேர் கொண்ட சீனத்தூக்குழுவுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரிசோதனைகூட செய்யப்படவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சீனக்குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி தொடுத்தார். முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரியுமான யாங் ஜீயேஷ தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 26 பேர் கொண்ட தூதுக்குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியேர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளனர்.
ஒக். 05 23:24

நாடாளுமன்றம் கொரோனா பரவலைக் காரணம் கூறி ஒத்திவைக்கப்படுமா?

(வவுனியா, ஈழம்) கோவிட் 19 எனப்படும் கொரேனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை அரசின் நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. நாளை நாடாளுமன்றம் கூடியதும் அவசர நிலைமைகளினால் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன பிறிதொரு தினத்துக்குச் சபையை ஒத்தி வைக்கலாமெனக் கூறப்படுகின்றது. அவ்வாறு ஒத்தவைக்கப்பட்ட பின்னர். வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 14 நாட்களுக்கு ஒத்திவைப்பாரென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
ஒக். 05 21:42

கொட்டகலையில் இராணுவ முகாம்- பெயர்க்கல் நாட்டப்பட்டது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கு 581 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்படுவதற்கான பெயர்க் கல் நாட்டப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொட்டகலைப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள முகாமில் சுமார் 300 இராணுவத்தினர் தங்கவுள்ளதாகவும் இதனால் சுற்றுப்பறங்களில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறும் இராணுவம் கூறியுள்ளது.