(யாழ்ப்பாணம், ஈழம்)
மொத்தக் கடன்களில் ஆகக் குறைந்தது முப்பத்தைந்து பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்தார். இந்த நிலையில் மூன்று பில்லியன் கடன்களைப் பெற ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் மார்ச் மாதம் கைச்சாத்திட்ட ஒப்பந்தம், வெள்ளிக்கிமை இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் சிங்கள பௌத்த தேசியப் பொது பொறிமுறைக்கும் (General Mechanism) அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது போல் தெரிகிறது.