செய்தி: நிரல்
பெப். 17 11:03

சர்வதேச விசாரணை மூலம் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்றனவற்றுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பெப். 17 09:59

கிளிநொச்சி மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது - நீரியல்வளத் திணைக்களம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை காரணமாக கடல்வளம் அழியும் அபாயம் காணப்படுவதாகவும் தமிழ் மீனவர்கள் அச்சத்துடன் கவலை வெளியிட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீரியல்வளத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெப். 16 22:15

வயலிலிருந்து மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை - கிளிநொச்சி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) விவசாய நிலமான கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்திலிருந்து மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கமக்கார அமைப்பின் கீழுள்ள வயல் காணி ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் நீண்ட காலம் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பனை மரங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணியில் இருந்து முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவரால் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு தனது காணிக்குள் நிரப்பப்பட்டுள்ளதாக கமக்கார அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெப். 16 21:40

வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் தமிழ் இளைஞன் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் - இளைஞன் பொலிஸாரால் கைது

(வவுனியா, ஈழம்) வவுனியா ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து தமிழ் இளைஞன் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக கூர்மையின் வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.
பெப். 16 14:30

ஐக்கிய தேசியக் கட்சியா, ஐக்கிய தேசிய முன்னணியா? இளம் உறுப்பினர்களிடையே குழப்பம் - இரகசியச் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணிக்குள் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அதனை ஏற்றுள்ளனர். ஆனால் கட்சியின் இளைய உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.