செய்தி: நிரல்
ஏப். 15 23:10

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் எட்டுப்பேர் இலங்கைப் பொலிஸாரால் கைது

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவா எனப்படும் குழவின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுத்துறையும் இலங்கைப் பொலிஸாரும் செயற்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் இலங்கைப் பொலிசார் நடத்திய சோதனை, தேடுதல் நடவடிக்கைகளில் ஆவா குழுவைச் சேர்ந்த எட்டுப்போர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய், உடுவில் பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மானிப்பாயில் உள்ள இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப். 14 21:29

தமிழ்க் கட்சிகளுக்கு வாகளிப்பதில்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்திரை வருடப்பிறப்பு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மார் தொடர்பாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும் ஆனாலும் சிங்கள அரசியல்வாதிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தினர். சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தரவில்லை எனவும் அவர்கள் குறைகூறினர்.
ஏப். 13 22:54

கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்குச் சட்டச் சிக்கலை ஏற்படுத்த மைத்திரி முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடையே பணிப்போர் நீடிக்கின்றது. இந்த நிலையில் தென்னிலங்கையில் அடுத்த அரசியல் சக்தியாகவுள்ள ஜே.வி.பி இந்த மூன்று கட்சிகளின் செயற்பாடுகளையும் கண்டித்து விமர்சித்து வருகின்றது.
ஏப். 12 15:20

கொழும்புக்குத் திரும்பிய கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்கள் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் இருந்து கொழும்புக்குத் திரும்பியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய கோட்டாபய ராஜபக்சவை பெருமளவான ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி வாழ்க என்று கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள், ஈழப் போரை அழித்த பெரும் தலைவரே எனவும் உரக்கச் சத்திமிட்டு வரவேற்றனர். கோட்டாபய ராஜபக்ச தனிப்பிட்ட முறையில கடந்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
ஏப். 11 22:45

கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் இல்லாத நிலையில் குழப்பங்கள் முரண்பாடுகள் அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கான அரசியல் வேலைத் திட்டங்களில் இலங்கைப் பிதரமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மூலமாகவே ரணில் விக்கிரமசிங்க அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்தாலும் அவர் இலங்கைக் குடியுரிமையை மாத்திரமே கொண்டுள்ளார் என்பதை இலங்கை உள்நாட்டு அலுவலகள் அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.