கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூலை 16 23:22

கன்னியா விவகாரம்- பிக்குகளின் பின்னணியில் தமிழ் இராவணசேனையுமா?

(திருகோணமலை, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அனுமதியோடு, தமிழ் பேசும் கிழக்குத் தாயகத்தின் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தை உடைத்துப் புத்த தாதுக் கோபுரம் கட்டும் நடவடிக்கைக்குப் பின்னணியில் நரேந்திர மோடியின் இந்துத்துவா அமைப்பின் கொள்கைகளை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் புதிய தமிழ் அமைப்பான இராவணசேனையும் செயற்படுவதாக திருகோணமலை மக்கள் பலா் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இராவணசேனை அமைப்பின் தலைமைச் செயலாளர் கு. செந்தூரனை கூர்மைச் செய்தித் தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராவணசேனை அமைப்புக்கும் இந்துத்துவாவுக்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லையென்று கூறினார்.
ஜூன் 29 09:37

போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதிக்கும் நுண்நிதிக் கடன்

(முல்லைத்தீவு, ஈழம்) போரின் தாக்கத்திலிருந்து தமிழ் சமூகம் படிப்படியாக மீண்டெழுந்துவரும் நிலையில், நுண்நிதிக் கடன் பிரச்சனை, தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் குடும்பத் தலைவிகளை பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி வருவதுடன் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முன்னரே, நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 10 வருடங்களாக பல தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 23 16:55

அரசியல் குழப்பத்திற்குக் காரணம் 19 ஆவது திருத்தம்- மைத்திரி

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும் இணைந்து தமக்கு இசைவான ஆட்சியாளர்கள் என்று நம்பியே நல்லாட்சி என்று கூறி மைத்திரி- ரணில் கூட்டு உருவாக்கப்பட்டது. மாற்றம் என்ற சூடு காய்வதற்கு முன்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச உருவாக்கிய 18 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஜனாதிபதிக்குரிய சர்வாதிகாரத் தன்மைகள், 2016 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன.
ஜூன் 20 15:31

கல்முனைப் போராட்டம்- பேரினவாதம் கையிலெடுத்த பின்னணி

(மட்டக்களப்பு, ஈழம்) கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களின் பின்னணியில் இந்துத்துவா அமைப்பு செயற்படுவதாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பௌத்த- இந்து உறவு என்ற பெயரில் வடக்கு- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சமீபகாலமாகச் செயற்பட்டு வரும் சில தமிழ்ப் பிரமுகர்கள், கண்டியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட பௌத்த போதனைகளை முதன்மைச் சமயமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் கீழ் இந்து சமய அடையாளங்களைப் பின்பற்ற இணங்கிய சூழலில், பௌத்த குருமாருடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் 18 20:13

முஸ்லிம்களோடு தமிழர்களை மோதவிட பிக்குமார் திட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களை மோதவிட்டு. மேலும் பிளவுகளை உருவாக்க பௌத்த பிக்குமார் முற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அம்பாறை- கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் பௌத்த பிக்குமாரினால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றது. இதற்கு சில தமிழ்ப் பிரமுகர்களும் தங்களை அறியாமல் உடன்பட்டுள்ளனர். வேறு சில தமிழர்கள் நன்கு திட்டமிடப்பட்ட இலங்கைப் புலனாய்வுத் துறையின் தந்திரத்தை அறியாமல் துணைபோயுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.