கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
நவ. 13 09:24

விடுதலையின் பின்னால் அரசியல் இல்லை- சட்டம் தன் வழி சென்றிருக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட அன்றைய தினமே நளினி உள்ளிட்ட ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய உயர் நீதிமன்றத்தினால் வெள்ளிக்கிழமை ஆறுபேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் எந்தவொரு அரசியலும் இல்லை என்பது பகிரங்கம். இந்த விடுதலைக்கு மோடி அரசாங்கமோ, தமிழகத்தில் தி.மு.க.அரசாங்கமோ உரிமை கோரவும் முடியாது முப்பது ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தைச் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை மே மாதம் 18 ஆம் திகதி விடுதலை செய்தது.
நவ. 05 15:53

விரிவடையும் சீனாவின் உலகப் பொருளாதாரம்

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவும் சீனாவும் உலக அரசியல் ஒழுங்கில் தங்கள் - தங்கள் பலத்தை நிறுவிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் சீன - ரசிய உறவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளும் பிரதான வகிபாகத்தைக் கொண்டுள்ளன. இதில் இந்திய வகிபாகம் என்பது இரட்டைத்தன்மை கொண்டுள்ளதால், அமெரிக்க - சீன வல்லாதிக்கப் போட்டியில் இந்தியா எந்தப் பக்கம் என்றில்லாத நிலைதான். அமெரிக்கச் சீன கருத்துப் பரிமாற்றங்கள் ஊடே பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியமற்ற தன்மை புலப்படுகின்றது. ஆனால் இந்தியாவின் சில பிரதான ஊடகங்கள் அதனை இந்திய மூலோபாயமாகக் காண்பிப்பதுதான் வேடிக்கை.
ஒக். 29 13:02

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா

(வவுனியா, ஈழம்) ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரசியாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரசியாவுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காத சூழலில், ரசியாவை ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் முன்னிலையில் தனித்துவம் மிக்கதாகக் காண்பிக்கவே சீனா முற்படுகின்றது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உலக அரசியல் ஒழுங்கில் மாற்றத்தைக் காண முற்படும் சீனா, முடிந்தவரை அமெரிக்காவுடன் இணங்கிச் செல்லும் காய்நகர்த்தல்களிலும் ஈடுபடுகின்றது. முன்னர் அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த அதே அணுகுமுறையைச் சீனா தற்போது கன கச்சிதமாகக் கையாள ஆரம்பித்துள்ளது.
ஒக். 22 11:01

சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா- சுயமரியாதையையும் இழந்தது

உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய் நகர்த்தல்களைத் தற்போது சீனா தனதாக்கி வருகின்றது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் சமர்கண்ட் நகரில் செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் (State of the Shanghai Cooperation Organisation - SCO) சீனாவின் நுட்பமான அணுகுமுறை வெளிப்பட்டுள்ளது. ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலினால், மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கை மேலும் தனக்குச் சாதகமாக வகைப்படுத்த இம் மாநாட்டைச் சீனா கன கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளதெனலாம்.
ஒக். 15 15:16

உக்ரெய்ன் - ரசியப் போர் மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்களில் இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

ரசிய - உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கத் தீர்மானித்திருந்தது. இதன் பின்னரான சூழலிலேயே இந்தியாவுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரெய்ன் விவகாரம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரசியா - உக்ரெய்ன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட மறுத்துவிட்டார்.
ஒக். 08 23:00

ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டிய இந்தியா

(கிளிநொச்சி, ஈழம்) உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்களை ரசிய பொது வாக்கெடுப்பின் மூலம், இணைத்துக் கொண்டமை தொடர்பாக இந்தியப் பேரரசுக்குப் பெரும் இராஜதந்திரச் சோதனை ஏற்பட்டுள்ளது. புதுடில்லி தனது நிலைப்பாட்டை விரைவில் விளக்குவோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக ரூதமிழ் (totamil) என்ற இந்திய செய்தி இணையத்தளம் தொிவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாகக் கண்டிதுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றது. ரசிய - இந்திய உறவே இதற்குக் காரணம். உக்ரேன் நெருக்கடியால் உருவாகி வரும் சர்வதேசச் சூழல் இந்தியாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக உக்ரேன் விடயத்தில் இந்தியா ரசியாவுடன் இருந்துள்ளது,
ஒக். 05 10:02

சிங்கள ஊடகத்துறையின் போக்குகள் - தமிழ் ஊடகத்துறை செயற்பட வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கமளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையத் தளங்கள் உள்ளிட்ட ஊடகத்துறையின் செயற்பாடுகள் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எதிர்காலத்தில் தமிழ் ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி ஊடக வட்டம் (Vadamarachchi Media Circle - V.C.M) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகத்துறை மற்றும் ஆசிரியர் தொழிற்துறையைச் சேர்ந்த பலரும் பங்குபற்றித் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
ஒக். 01 22:48

அன்று தமிழர்கள் கேட்டதை இன்று செய்து காண்பித்த ரசியா

ரசிய - உக்ரேயன் போர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் உலக அரசியல் ஒழுங்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் 2009இற்குப் பின்னரான சூழலில், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து வரும் வடக்குக் கிழக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் சர்வதேச அரசியல் பார்வைகள் இன்றி வெறுமனே கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்கும், சர்வதேச அரசியல் - பொருளாதார அவதானிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
செப். 26 06:23

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு

(யாழ்ப்பாணம், ஈழம்) காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்சல் பச்லெட் பதவி விலகியுள்ள சூழலில், இந்த அறிக்கை ஜெனீவா மனித உரிமைச் சபையின் பணியாளர்கள் மட்டத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை என்று கூறப்படுகின்றதே தவிர தமிழர்களுடைய அரசியல் பிரச்சினையின் ஆழம் அறிக்கையில் தெளிவாக இல்லை.
செப். 18 09:25

இலங்கைத்தீவு விவகாரம் குறித்த இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுகின்றது. ஆனாலும், தொடர்ந்து இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இழுபறிகள் உண்டு என்பதைச் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட இந்தோ பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல் போட்டிகளே இதற்குப் பிரதான காரணம். இலங்கையின் கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா வழங்கிய கடன்களாகும்.